Flipkart Big Billion Days Sale 2025: பிரபல இ காமர்ஸ் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில், Flipkart Big Billion Days Sale 2025 விற்பனை விரைவில் தொடங்க உள்ளது. பிரபலமான இந்த பிளிப்கார்ட் சேலுக்காக வாடிக்கையாளர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். பிளிப்கார்ட் விற்பனை தொடங்குவதற்கு முன்னதாகவே, இந்த சேலில் கிடைக்கும் தள்ளுபடி சலுகைகள் பற்றிய செய்திகள் வெளிவந்துள்ளன.
Add Zee News as a Preferred Source
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேய்ஸ் சேல் 2025
ஃபிளிப்கார்ட்டின் இந்த சேலில் மின்னனு உபகரணங்கள், ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவி, ஆடை, ஆபரணங்கள் என அனைத்திலும் அதிக தள்ளுபடிகளும் சலுகைகளும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, ஸ்மார்ட் டிவியை வாங்க திட்டமிட்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த பிளிப்கார்ட் சேல் மிகவும் ஏற்றதாக இருக்கும்.
Flipkart Big Billion Days Sale 2025: குறைந்த விலையில் 43 அங்குல டிவியை வாங்கும் வாய்ப்பு
இந்த சேலில், இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்த விலையில் 43 அங்குல ஸ்மார்ட் டிவியை வாங்கலாம். ஃபிளிப்கார்ட்டின் இந்த சேலில், 20 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் வாங்கக்கூடிய ஐந்து ஸ்மார்ட் டிவிகளைப் பற்றிய விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
Flipkart Big Billion Days Sale 2025: Philips frameless Smart TV
பிலிப்ஸ் பிரேம்லெஸ் ஸ்மார்ட் டிவி
– பிலிப்ஸின் 43-இன்ச் பிரேம்லெஸ் LED ஸ்மார்ட் டிவி பிளிப்கார்ட் சேலில் வெறும் ரூ.20,999க்கு கிடைக்கும்.
– அதன் வெளியீட்டு விலை ரூ.34,999 ஆகும்.
– இதில் வாடிக்கையாளர்களுக்கு முழு HD ஸ்க்ரீன் கிடைகும்.
– இதனுடன், ஆண்ட்ராய்டு டிவி இயக்க முறைமையும் கிடைக்கும்.
Flipkart Big Billion Days Sale 2025: TCL iFFALCON Smart TV
டிசிஎல் iFFALCON ஸ்மார்ட் டிவி
– 4K டிவியை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது ஏற்றதாக இருக்கும்.
– இந்த டிவி ரூ.19,999க்கு கிடைக்கிறது.
– இதன் அசல் விலை ரூ.50,999.
– கூகிள் டிவியும் இதில் கிடைக்கிறது.
– இதனுடன், கூகிள் பிளே ஸ்டோர் மற்றும் ஸ்மார்ட் ரிமோட்டும் கிடைக்கிறது.
Flipkart Big Billion Days Sale 2025: Thomson Smart TV with Jio TeleOS
ஜியோ டெலிஓஎஸ் 04 / 06 உடன் தாம்சன் ஸ்மார்ட் டிவி
– இந்த பிளிப்கார்ட் சேலில் ரூ.18,999க்கு தாம்சன் 43 இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்க வாய்ப்பு உள்ளது.
– இதில் ஜியோ டெலிஓஎஸ் உள்ளது.
– இது சுமார் 42 சதவீதம் மலிவான விலையில் கிடைக்கிறது.
– இதில் 40W ஸ்பீக்கர் உள்ளது.
– இதில் தியேட்டர் போன்ற அனுபவம் கிடைக்கும் என நிறுவனம் கோரியுள்ளது.
– இதனுடன், ரூ.5,400 எக்ஸ்சேஞ்ச் போனஸும் கிடைக்கும்.
Flipkart Big Billion Days Sale 2025: Foxsky Smart TV
ஃபாக்ஸ்கை ஸ்மார்ட் டிவி
– பிளிப்கார்ட் சேலில் ஃபாக்ஸ்கை 43 இன்ச் ஸ்மார்ட் டிவி வெறும் ரூ.12,499க்கு கிடைக்கிறது.
– இந்த டிவியில் ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ்ஸும் கிடைக்கும்.
– இதனுடன் 1 வருட உத்தரவாதமும் கிடைக்கிறது.
Flipkart Big Billion Days Sale 2025: KODAK Special Edition
கோடாக் சிறப்பு பதிப்பு
– கோடாக்கின் இந்த சிறப்பு பதிப்பு டிவியை ஃபிளிப்கார்ட் விற்பனையில் வெறும் ரூ.13,999க்கு வாங்கலாம்.
– பிரைம் வீடியோ, யூடியூப், சோனி எல்ஐவி போன்ற செயலிகள் இதில் முன்பே நிறுவப்பட்டிருக்கும்.
– இதில் லினக்ஸ் ஓஎஸ் உள்ளது.
– இதன் ஸ்க்ரீன் முழு HD.
– இதில் 30W ஸ்பீக்கர் உள்ளது.
About the Author
Sripriya Sambathkumar