Flipkart Big Billion Days Sale 2025: இந்த ஆண்டு அதிக சலுகை, அதிக தள்ளுபடி… முழு விவரம் இதோ

Flipkart Big Billion Days Sale 2025: பண்டிகை சீசன் தொடங்கியவுடன், அனைவரும் ஷாப்பிங் செய்யத் திட்டமிடுகிறார்கள். இந்த நேரங்களில் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் நடக்கும் பெரிய விற்பனை நிகழ்வுகளுக்காகவும் வாடிக்கையாளர்கள் காத்திருக்கின்றனர். வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் ஒவ்வொரு ஆண்டும் அது நடத்தும் மிகப்பெரிய சேலான பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2025 ஐ அறிவித்துள்ளது. 

Add Zee News as a Preferred Source

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2025

ஃபிளிப்கார்ட் நிறுவனம் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2025 -க்கான டீஸரையும் வெளியிட்டுள்ளது, மேலும் இந்த முறை இந்த விற்பனைக்கான டேக் லைன் ‘It’s Back & Bigger!’. அதாவது, இந்த முறை இந்த முறை விற்பனை முன்பை விட பெரியதாக இருக்கும் என்பதை புரிந்துகொள்ளலாம். இந்த ஆண்டுக்கான பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ்ஸில் என்ன சிறப்ப்பு என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

Flipkart Big Billion Days Sale 2025: அனைத்து பொருட்களிலும் பம்பர் தள்ளுபடி

இந்த பிக் பில்லியன் டேஸ் விற்பனையில், வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், ஸ்மார்ட்வாட்ச்கள், இயர்பட்கள் மற்றும் மின்னணு உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்களில் பம்பர் தள்ளுபடிகளைப் பெறப் போகிறார்கள் என நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக Samsung Galaxy S25, iPhone 16 series, Samsung Galaxy S24 மற்றும் Google Pixel 10 போன்ற பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தள்ளுபடிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Flipkart Big Billion Days Sale 2025: பிளஸ் உறுப்பினர்களுக்கான ஆரம்ப அணுகல்

Flipkart Plus உறுப்பினர்கள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Flipkart Black சந்தா பயனர்கள் பிக் பில்லியன் டேஸ் விற்பனையை 24 மணி நேரத்திற்கு முன்பே அணுகலாம். அதாவது, இந்த வாடிக்கையாளர்கள் மற்றவர்களுக்கு முன்பாக விற்பனை சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். குறிப்பாக அதிக டிமாண்ட் உள்ள மற்றும் விரைவாக ‘அவுட்-ஆஃப்-ஸ்டாக்’ ஆகும் பொருட்களில் இந்த அணுகல் மிகவும் உதவியாக இருக்கும்.

Flipkart Big Billion Days Sale 2025: வங்கி அட்டைகளில் கூடுதல் சேமிப்பு

இந்த முறை Flipkart Axis Bank மற்றும் ICICI வங்கியுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த வங்கிகளின் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி பணம் செலுத்தும்போது வாடிக்கையாளர்கள் 10% வரை உடனடி தள்ளுபடியைப் பெறுவார்கள். அதாவது, நீங்கள் விலையுயர்ந்த பொருட்களை வாங்கினால், இந்த வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி இன்னும் அதிகமாகச் சேமிக்க முடியும்.

Flipkart Big Billion Days Sale 2025: எக்ஸ்சேஞ்ச் சலுகையின் நன்மையும் கிடைக்கும்

பிளிப்கார்ட் விற்பனையின் போது, ​​வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய அல்லது ஏற்கனவே உள்ள சாதனங்களை மாற்றியும் புதிய சாதனங்களில் தள்ளுபடிகளை பெறலாம். இருப்பினும், பரிமாற்ற மதிப்பு உங்கள் சாதனத்தின் மாதிரி மற்றும் அதன் நிலையைப் பொறுத்தது. இந்த சலுகை புதிய பொருட்களின்  விலையை கணிசமாகக் குறைக்க உதவும்.

Flipkart Big Billion Days Sale 2025: ஃப்ளிப்கார்ட்டின் புதிய கிரெடிட் கார்டு

சமீபத்தில் ஃப்ளிப்கார்ட் ஃப்ளிப்கார்ட் எஸ்பிஐ கிரெடிட் கார்டை (Flipkart SBI Credit Card) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அட்டை ஆன்லைன் ஷாப்பிங்கிற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் ஃப்ளிப்கார்ட்டில் ஷாப்பிங் செய்வதற்கு கேஷ்பேக் மற்றும் வெகுமதி புள்ளிகளைப் பெறுவார்கள். பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் இந்த கார்டைப் பயன்படுத்துபவர்களுக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் கூடுதல் சேமிப்புகளின் நன்மையும் வழங்கப்படும்.

Flipkart Big Billion Days Sale 2025: மிகப்பெரிய ஷாப்பிங் வாய்ப்பு

ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2025 என்பது பண்டிகை காலத்திற்கு முன்னர் வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த பொருட்களை வாங்க ஒரு சிறந்த வாய்ப்பாகும். மிகப்பெரிய தள்ளுபடிகள், வங்கி சலுகைகள், எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மற்றும் சிறப்பு கிரெடிட் கார்டு சலுகைகளுடன், இந்த விற்பனை வாடிக்கையாளர்களுக்கு அதிக சலுகைகளைக் கொண்டுவருகிறது. இந்த விற்பனை தொடர்பான கூடுதல் தகவல்களை வரும் நாட்களில் ஃப்ளிப்கார்ட் பகிர்ந்து கொள்ளும்.

About the Author


Sripriya Sambathkumar

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.