சென்னை: உங்களுடன் ஸ்டாலின் முகாம் மக்களுக்கு உதவுவதற்கா? மக்களை அடித்து விரட்டுவதற்கா? பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். ராணிப்பேட்டை அருகே செப்டம்பர் 3ந்தேதி நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின் முகாமில்” மனு கொடுக்க வந்த வயதானவரை காவலர் ஒருவர் முகத்தில் குத்தியும், மார்பை பிடித்து தள்ளியும் கடுமையாக தாக்கியதாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதையடுத்து, சம்பவம் குறித்து ராணிப்பேட்டை காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அத்துடன் காவல்துறையினரால் தாக்கப்பட்ட முதியவர், […]
