கட்டுமான தொழிலாளர் நலவாரியம் மூலம் 4 ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு ரூ.1,752 கோடி உதவித்தொகை

சென்னை: கட்​டு​மான தொழிலா​ளர் நலவாரி​யம் மூலம் கடந்த 4 ஆண்​டு​களில் 20 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட தொழிலா​ளர்​களுக்கு ரூ.1,752 கோடி உதவித்​தொகை வழங்​கப்​பட்​டுள்​ளது.

தமிழ்​நாடு கட்​டு​மான தொழிலா​ளர் நலவாரி​யத்​தின் 41-வது கூட்​டம் சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. இக்​கூட்​டத்​துக்கு வாரி​யத்​தின் தலை​வர் பொன்​.கு​மார் தலைமை வகித்தார். தொழிலா​ளர் நலன் மற்​றும் திறன் மேம்​பாட்​டுத் துறை செயலர் கொ.வீர​ராகவ ராவ், கட்​டு​மான தொழிலா​ளர் நலவாரிய செயலர் கே.ஜெய​பாலன் ஆகியோர் முன்​னிலை வகித்​தனர்.

கட்​டு​மான தொழிலா​ளர் நலவாரி​யம் தொடங்​கப்​பட்ட நாள்​முதல் கடந்த ஜூலை 31-ம்தேதி வரை 27 லட்​சத்து 46,572 தொழிலா​ளர்​கள் வாரி​யத்​தில் பதிவு செய்​துள்​ள​தாக​வும் ரூ.2,608 கோடி மதிப்​பீட்​டில் தனி​நபர் விபத்து நிவாரணம், விபத்​து, ஊனம், இயற்கை மரணம், கல்​வி, திரு​மணம், ஓய்​வூ​தி​யம், குடும்ப ஓய்​வூ​தி​யம், நோய்​களுக்​கான சிகிச்​சைக்கு நிவாரணம் உட்பட பல்​வேறு நலத்​திட்ட உதவி​கள் வழங்​கப்​பட்​டுள்​ள​தாக​வும் தெரிவிக்​கப்​பட்​டது.

புதிதாக 15.74 லட்சம் பேர் பதிவு: மேலும், கடந்த 4 ஆண்​டு​களில் 15 லட்​சத்து 74,116 பேர் புதி​தாக வாரி​யத்​தில் பதிவு செய்​துள்​ள​தாக​வும், 20 லட்​சத்து 60,600 பேருக்கு பல்​வேறு நலத்​திட்​டங்​களின்​கீழ் ரூ.1,752 கோடி மதிப்​பில் உதவித்​தொகை வழங்​கப்​பட்​டிருப்​ப​தாக​வும் தெரிவிக்​கப்​பட்​டது. இந்​த கூட்​டத்​தில் அரசு பிர​தி​நி​தி​கள், வேலை​யளிப்​பர் தரப்பு பிர​தி​நி​தி​கள், தொழிலா​ளர்​களின் பிர​தி​நி​தி​கள்​ கலந்​து​கொண்​டனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.