GST Auto Sector explained – ஜிஎஸ்டி வரி குறைப்பு சிறிய கார்கள் மற்றும் டூ வீலர்களுக்கு 18 % மட்டுமே.!

வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய ஜிஎஸ்டி வரி குறைப்பின் அடிப்படையில் இனி 5 % மற்றும் 18 % ஆக மாற்றப்பட்டுள்ளதால் 350ccக்கு குறைந்த இரு சக்கர வாகனங்கள், 1200cc பெட்ரோல், 1500cc டீசல் அல்லது 4 மீட்டருக்கு குறைந்த சிறிய கார்களுக்கும் இனி 18 % மட்டுமே வரி விதிக்கப்பட உள்ளது.

முன்பாக 5 % , 12 % 18% மற்றும் 28 % ஆக இரு நிலையில் தற்பொழுது இரண்டு அடுக்கு முறைக்கு மாற்றப்பட்டு 12 % மற்றும் 28 % நீக்கப்பட்டுள்ளது.

GST For Two wheelers

  • 350ccக்கு குறைந்த அனைத்து இரு சக்கர வாகனங்களான மோட்டார்சைக்கிள், ஸ்கூட்டர்களுக்கு முன்பாக இருந்த 28% வரி நீக்கப்பட்டு இனி 18 % வரியாக குறைக்கப்பட்டுள்ளதால் பெருமளவு விலை குறைப்பு கிடைக்க உள்ளது.
  • இதன் மூலம் ஹீரோ, ஹோண்டா, டிவிஎஸ், பஜாஜ், யமஹா, சுசுகி உள்ளிட்ட நிறுவனங்களும் ராயல் என்ஃபீல்டு 350 வரிசை, ஜாவா, யெஸ்டி உள்ளிட்ட நிறுவனங்கள் அனைத்து இந்திய ஸ்கூட்டர் தயாரிப்பாளர்களும் பலன் பெறுவா்கள்.
  • ஆனால் 350ccக்கு மேற்பட்ட வாகனங்களுக்கு முன்பாக 28%+3% செஸ் வரி விதிக்கப்பட்ட நிலையில், இனி 40 % ஆக வரி உயர்த்துப்படுதவதனால் கடும் பாதிப்பினை சந்திக்க உள்ளது.
  • குறிப்பாக டிரையம்ப், ராயல் என்ஃபீல்டு 450, 650 வரிசை, ஹீரோ ஹார்லி-டேவிட்சன், டுகாட்டி, கேடிஎம், உள்ளிட்ட பெரும்பாலான பிரீமியம் தயாரிப்பாளர்கள் பாதிப்படைவார்கள்.
  • எலக்ட்ரிக் டூ வீலர்களுக்கு தொடர்ந்த 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளது.


tata harrier suvtata harrier suv

GST For Cars and SUV’s

  • 1200cc க்கு குறைந்த பெட்ரோல் எஞ்சின் அல்லது 1500cc குறைந்த டீசல் என்ஜின் அல்லது 4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள கார்கள், எஸ்யூவிகள் என அனைத்திற்கும் இனி 18 % ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகின்றது.
  • மாருதி, ஹூண்டாய், டாடா, மஹிந்திரா, ஸ்கோடா, சிட்ரோன் உள்ளிட்ட நிறுவனங்கள் பெரும் பலன் பெறுவார்கள்.
  • முன்பாக மற்ற கார்கள் மற்றும் எஸ்யூவி பிரீமியம் கார்களுக்கு 28% ஜிஎஸ்டி வரியுடன் கூடுதலாக செஸ் வரி 1 % முதல் 23 % வரை விதிக்கப்பட்டதால் 31 % முதல் 50% வரை வரி விதிக்கப்பட்டது, ஆனால் இனி 40% ஆக மாற்றப்பட்டுள்ளது.
  • இதனால் ஹூண்டாய் க்ரெட்டா, எலிவேட், கிராண்ட் விட்டாரா, உட்பட பல்வேறு எஸ்யூவிகள் மிகப் பெரும் விலை உயர்வை சந்திக்க உள்ளது.
  • அதே நேரத்தில் 50 % வரி விதிக்கப்பட்டு வந்த சில எஸ்யூவிகள் விலை 10 % வரை குறைந்த 40% வரிக்குள் பலன் பெறுவார்கள். குறிப்பாக ஃபார்ச்சூனர் போன்றவை பலன் பெறும்.
  • ஹைபிரிட் வாகனங்களுக்கு எந்த பிரத்தியேக சலுகையும் இல்லை.
  • எலக்ட்ரிக் கார்களுக்கு தொடர்ந்த 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளது

GST for Three Wheelers

  • மூன்று சக்கர வாகனங்களுக்கு முன்பாக விதிக்கப்பட்டு வந்த 28 % ஜிஎஸ்டி வரி இனி 18 % ஆக மாற்றப்பட்டுள்ளது.
  • பியாஜியோ அபே, டிவிஎஸ், பஜாஜ் உள்ளிட்ட நிறுவனங்கள் பலன் பெறுவார்கள்.
  • எலக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்களுக்கு தொடர்ந்து 5 % வரி விதிக்கப்பட உள்ளது.

bajaj gogo p5009 electric autorickshawbajaj gogo p5009 electric autorickshaw

GST For Agricultures

  • புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் அனைத்து விவசாயம் சார்ந்த வாகனங்களான டிராக்டர், உட்பட மற்ற இயந்திரங்கள், உதிரிபாகங்கள், டயர் என அனைத்தும் 5 % ஆக மாற்றப்பட்டுள்ளது.
  • முன்பு 12% முதல் 18 % வரை மாறுபட்ட வரி விதிப்பு நடைமுறையில் இருந்தது.
  • மஹிந்திரா, ஸ்வராஜ், எஸ்கார்ட்ஸ், விஎஸ்டி, டஃபே உள்ளிட்ட பெரும்பாலான தயாரிப்பாளர்கள் பலன் பெறுவார்கள்.


MF 1035 DI tractorMF 1035 DI tractor

GST For Commercial Vehicles

  • 28 % வரி விதிப்பிலிருந்து பேருந்துகள், டிரக்குகள் (லாரி) மற்றும் ஆம்புலன்ஸ் என அனைத்து வர்த்தக வாகனங்களும் இனி 18% ஆக மாற்றப்பட்டுள்ளது.
  • இதனால் ஃபோர்ஸ், டாடா, அசோக் லேலண்ட், மஹிந்திரா, பாரத் பென்ஸ், வால்வோ ஐஷர் என பல வர்த்தக வாகனங்கள் தயாரிப்பாளர்கள் நன்மை அடைவார்கள்.


tata truckstata trucks

 

GST For Auto Components

  • அனைத்து மோட்டார் வாகன உதிரிபாகங்களும் இனி 18 % வரி மட்டுமே விதிக்கப்பட உள்ளது. முன்பாக இது 28 % வரியாக இருந்தது.
  • குறிப்பாக டிராக்டர் உதிரிபாகங்கள், டிராக்டர் டயர்களுக்கு இனி 5 % வரி மட்டும் விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்தியாவின் ஆட்டோமொபைல் துறைக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு சிறிய கார்கள், எஸ்யூவி மற்றும் 350cc க்கு குறைந்த திறன் பெற்ற இரு சக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

ஆனால், மிக வேகமாக வளர்ந்து வரும் பிரீமியம் கார்கள், 350ccக்கு மேற்பட்ட இரு சக்கர வாகனங்களுக்கு 40% வரி என்பது பாதிப்பை சந்திக்கும், குறிப்பாக ஏற்றுமதி சந்தையில் விலை அதிகரிக்கும் என ராயல் என்ஃபீல்டு தலைவர் சித்தார்த் லால் ஏற்கனவே கருத்தை பதிவு செய்திருந்தார்.

Related Motor News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.