ஆசியக் கோப்பை எந்த சேனலில் ஒளிபரப்பாகிறது? இலவசமாக எப்படி பார்ப்பது?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிவடைந்து ஒரு மாதம் ஆகி உள்ள நிலையில், அனைவரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்காக காத்து கொண்டுள்ளனர். ஆசியக் கோப்பை 2025 போட்டிகள் இந்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக தொடங்குகிறது. செப்டம்பர் 9 முதல் 28 வரை நடைபெறும் இந்த 17-வது ஆசியக் கோப்பை தொடர் டி20 வடிவத்தில் நடைபெற உள்ளது. 2026 டி20 உலக கோப்பைக்கு ஒரு முன்னோட்டமாக அமையும் இந்த தொடரில், மொத்தம் 8 அணிகள் விளையாட உள்ளன.

Add Zee News as a Preferred Source

ஆசிய கோப்பை எப்படி நடைபெறும்?

இந்த தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. பங்கேற்கும் எட்டு அணிகளும் தலா நான்கு அணிகள் வீதம் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் குரூப்பில் உள்ள மற்ற அணிகளுடன் ஒருமுறை மோதும். ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், சூப்பர் ஃபோர் சுற்றுக்கு தகுதி பெறும். இந்த சுற்றில், ஒவ்வொரு அணியும் மற்ற மூன்று அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். சூப்பர் ஃபோர் சுற்றின் முடிவில், புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், செப்டம்பர் 28 அன்று துபாயில் நடைபெறும் இறுதி போட்டியில் விளையாடுவார்கள்.

குரூப் மற்றும் அணிகள்

குரூப் A – இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அமீரகம், ஓமன்.
குரூப் B – இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங்

போட்டி அட்டவணை

செப். 9 – ஆப்கானிஸ்தான் vs ஹாங் காங் – இரவு 7:30
செப். 10 – இந்தியா vs ஐக்கிய அரபு அமீரகம் – இரவு 7:30
செப். 11 – வங்கதேசம் vs ஹாங் காங் – இரவு 7:30
செப். 12 – பாகிஸ்தான் vs ஓமன் – இரவு 7:30
செப். 13 – வங்கதேசம் vs இலங்கை – இரவு 7:30
செப். 14 – இந்தியா vs பாகிஸ்தான் – இரவு 7:30
செப். 15 – ஐக்கிய அரபு அமீரகம் vs ஓமன் – மாலை 5:30
செப். 15 – இலங்கை vs ஹாங் காங் – இரவு 7:30
செப். 16 – வங்கதேசம் vs ஆப்கானிஸ்தான் – இரவு 7:30
செப். 17 – பாகிஸ்தான் vs ஐக்கிய அரபு அமீரகம் – இரவு 7:30
செப். 18 – இலங்கை vs ஆப்கானிஸ்தான் – இரவு 7:30
செப். 19 – இந்தியா vs ஓமன் – இரவு 7:30
இறுதி போட்டி – செப்டம்பர் 28

டிவி ஒளிபரப்பு மற்றும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்

ஆசியக் கோப்பை 2025 தொடரின் அனைத்துப் போட்டிகளும் இந்தியாவில் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். டிஜிட்டல் தளத்தில், ரசிகர்கள் சோனி லிவ் செயலி மற்றும் இணையதளத்தில் போட்டிகளை நேரடியாக காணலாம்.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.