இளம் வயதிலேயே இவ்வளவு வருமானமா? அபிஷேக் சர்மா சொத்து மதிப்பு!

இந்திய டி20 அணியின் புதிய அதிரடி ஓப்பனிங் வீரராக ஜொலித்து வரும் இளம் வீரர் அபிஷேக் ஷர்மா, தனது சிறப்பான ஆட்டத்தாலும், தொடர்ச்சியான சாதனைகளாலும் குறுகிய காலத்தில் பெரும் புகழையும், அதிக சொத்துக்களையும் சேர்த்துள்ளார். ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காகவும், இந்திய டி20 அணிக்காகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். முதல் பந்து முதலே அடித்து ஆடக்கூடிய இவர் ஆசிய கோப்பை அணியிலும் இடம் பெற்றுள்ளார். ஒருபுறம் அதிக புகழ் கிடைத்தாலும், அவரது சம்பள மதிப்பும் மறுபுறம் அதிகரித்து வருகிறது.

Add Zee News as a Preferred Source

சொத்து மதிப்பு

2025 ஆம் ஆண்டின் கணக்குப்படி அபிஷேக் ஷர்மாவின் நிகர சொத்து மதிப்பு சுமார் ரூ.25 கோடி முதல் ரூ.30 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சில அறிக்கைகளின்படி, இன்னும் அதிகம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த சொத்து மதிப்பு, அவரது ஐபிஎல் சம்பளம், பிசிசிஐ ஒப்பந்தம், பிராண்ட் ஒப்பந்தங்கள் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கான கட்டணங்கள் ஆகியவற்றின் மூலம் அதிகரித்துள்ளது. அபிஷேக் ஷர்மாவின் கிரிக்கெட் பயணத்தில், ஐபிஎல் 2025 மெகா ஏலம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இவரை ரூ.14 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்குத் தக்கவைத்துக் கொண்டது. இது ஐபிஎல் வரலாற்றில், இளம் வீரர்களில் அதிக சம்பளம் வாங்கும் வீரர்களில் ஒருவராக அவரை மாற்றியுள்ளது.

பிசிசிஐ ஒப்பந்தம் மற்றும் சர்வதேசப் போட்டி

இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி வருவதால், அபிஷேக் ஷர்மா பிசிசிஐ-யின் மத்திய ஒப்பந்தத்தில் Grade C பிரிவில் இடம்பிடித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின் மூலம், அவருக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடி சம்பளமாக கிடைக்கிறது. இது தவிர, அவர் விளையாடும் ஒவ்வொரு சர்வதேச டி20 போட்டிக்கும் ரூ.3 லட்சம் போட்டி கட்டணமாக வழங்கப்படுகிறது.

பிராண்ட் ஒப்பந்தங்கள்

கிரிக்கெட் களத்திற்கு வெளியேவும், அபிஷேக் ஷர்மாவின் வருமானம் அதிகமாக உள்ளது. இதற்கு பிராண்ட் ஒப்பந்தங்கள் பெரிதும் பங்காற்றுகின்றன. இவரது அதிகரித்து வரும் புகழ், பல முன்னணி பிராண்டுகளை ஈர்த்துள்ளது. இதன் மூலம், ஆண்டுக்கு சுமார் ரூ.6 முதல் ரூ.8 லட்சம் வரை அவர் வருமானம் பெறுகிறார்.   சரீன் ஸ்போர்ட்ஸ், ரியல்மி இந்தியா, ஐஸ்கிரீம்ஸ், அமேசான் இந்தியா, பிர்லா ஓபஸ் பெயிண்ட்ஸ் போன்ற நிறுவனங்கள் மூலம் வருமானம் பெறுகிறார். 

அபிஷேக் ஷர்மா தனது கடின உழைப்பால் ஈட்டிய வருமானத்தில், ஒரு ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அவரிடம், பிரீமியம் ரக காரான பிஎம்டபிள்யூ 320d உள்ளது. மேலும், பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரஸ் நகரின் ஒரு முக்கிய பகுதியில், தனது குடும்பத்துடன் ஒரு பிரம்மாண்டமான வீட்டில் வசித்து வருகிறார். இளம் வயதிலேயே, கிரிக்கெட் உலகில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ள அபிஷேக் ஷர்மாவின் சொத்து மதிப்பு, வரும் ஆண்டுகளில் மேலும் பல மடங்காக உயரும் என்பதில் சந்தேகமில்லை.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.