என்னை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்ல திட்டம்: ஆம் ஆத்மி எம்எல்ஏ வீடியோ வெளியீடு

சண்டிகர்: பஞ்​சாப் மாநிலம், சனூர் சட்​டப்​பேர​வைத் தொகுதி ஆம் ஆத்மி எம்​எல்ஏ ஹர்​மீத் பதன் மஜ்​ரா. அவர் மீது ஒரு பெண் பாலியல் வன்​கொடுமை புகார் அளித்​தார். இதன்​பேரில் பாட்​டி​யாலா சிவில் லைன்ஸ் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்து கடந்த 2-ம் தேதி கர்​னால் பகு​தி​யில் எம்​எல்ஏ ஹர்​மீத்தை கைது செய்​தனர்.

கர்​னால் போலீஸ் நிலை​யத்​துக்கு எம்​எல்​ஏவை அழைத்து சென்​றனர். அப்​போது அவரும் அவரது கூட்​டாளி​களும் போலீ​ஸார் மீது துப்​பாக்​கி​யால் சுட்​டு​விட்டு தப்​பியோடி​விட்​டனர்.

இந்த சூழலில் அவர் சமூக வலை​தளத்​தில் ஒரு வீடியோவை வெளி​யிட்டு உள்​ளார். அதில் கூறி​யிருப்​ப​தாவது: எட்டு எஸ்​பிக்​கள், 8 டிஎஸ்​பிக்​கள், 5 இன்​ஸ்​பெக்​டர்​கள், என்​க​வுன்ட்​டர் போலீஸ் அதி​காரி விக்​ரம் பிரார் ஆகியோர் என்னை கைது செய்​தனர். கர்​னால் போலீஸ் நிலை​யத்​துக்கு அழைத்​துச் சென்​றனர்.

இதன்​பிறகு என்னை என்​க​வுன்ட்​டரில் கொலை செய்ய திட்​ட​மிட்டு இருப்​ப​தாக ரகசிய தகவல் கிடைத்​தது. இதன் ​காரண​மாகவே போலீஸ் நிலை​யத்​தில் இருந்து தப்​பியோடினேன். இவ்​வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.