சென்னை: தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையில் ஏராளமான காலி பணியிடங்கள் நிரப்பபடாமல் உள்ள தை சுட்டிக்காட்டி உள்ள பாமக தலைவர் அன்புமணி, திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறை பாழடைந்த துறையாக மாறியுள்ளது என விமர்சித்து உள்ளார். இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் 24 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்களும், 29 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களும் காலியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பள்ளிக்கல்வியின் முதுகெலும்பாக திகழ்பவர்கள் முதன்மைக்கல்வி அலுவலர்களும், மாவட்டக் கல்வி […]
