தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ஒரு வார பயணமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது, லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தோட்ட தரணியின் கை வண்ணத்தில் உருவான தந்தை பெரியார் படத்தை ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதையடுத்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பேசிய மு.க. ஸ்டாலின்,
“பெரியாரின் பேரன் என்ற கம்பீரத்துடன் அவரது உருவப்படத்தை திறந்து வைத்துள்ளேன். பெரியார் இன்று உலகம் முழுவதுக்கும் தேவைப்படுகிறார். அவரின் கொள்கை வாரிசு நான். பலமுறை பெரியாரை நான் பார்த்திருக்கிறேன்.”
“குறிப்பாக எங்கள் வீட்டில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு பெரியார் வந்துள்ளார். அந்த நேரத்தில் என் கையால் அவருக்கு சோறு பரிமாறியிருக்கிறேன். இதைச் சொல்வதில் எனக்கு பெருமையாக உள்ளது. ஒரு இனத்திற்கே சுயமரியாதையை ஊட்டி முன்னேற்றம் செய்தவர் பெரியார்,” என்று பேசியுள்ளார்.
#SelfRespectMovement – A revolution that redefined freedom! Chains fell, dignity rose!
Thanthai Periyar’s Self-Respect Movement shattered fundamentalisms, awakened dignity, nurtured scientific temper, and made us a guiding light of social transformation.
At #Oxford, I spoke… pic.twitter.com/ESFq8VLcJF
— M.K.Stalin (@mkstalin) September 5, 2025
இதுகுறித்து எக்ஸ் தளத்தில், “ஆயிரம் ஆண்டுகளாக அறிவார்ந்த பலரின் கனவாக இருக்கும் ஆக்ஸ்போர்டு அறிவாலயத்தில், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் கனவாக எழுந்த சுயமரியாதை இயக்கத்தையும் புரட்சியாளர் பெரியாரையும் போற்றினேன்!” என்று பதிவிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs