Flipkart Big Billion Sale 2025 Discount Offers: பண்டிகை கால ஷாப்பிங் சீசன் தற்போது தொடங்கிவிட்டது, இந்த விற்பனையில் எப்போதும் போலவே இந்த முறையும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும். அதன்படி தற்போது செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் தொடங்கும் பிக் பில்லியன் டேஸ் சேல் 2025 (Big Billion Days 2025) ஐ ஃப்ளிப்கார்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த மெகா விற்பனையில், ஐபோன் முதல் லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் டிவி வரை அனைத்திலும் பெரும் தள்ளுபடியுடன் ஷாப்பிங் செய்ய உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைக்கும்.
Add Zee News as a Preferred Source
இரட்டை தள்ளுபடிகள் ஒரே நேரத்தில் கிடைக்கும்
அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேலும் ஒரே நாளில் தொடங்கும் என்ற செய்தி பரவி வருகிறது. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் ஷாப்பிங்கில் ஒரே நேரத்தில் இரட்டை தள்ளுபடிகளை சரிப்பார்த்து ஷாப்பிங் செய்துக் கொள்ள முடியும். இந்த இரண்டு ஷாப்பிங் தளங்களும் அவற்றின் ஒன்-டு-ஒன் சலுகைகளுக்கு பிரபலமானவை. குறிப்பாக எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கேஜெட்களில் மிகப்பெரிய தள்ளுபடிகள் வழங்கப்படும்.
உறுப்பினர்களுக்கு சிறப்பு சலுகைகள் கிடைக்கும்
ஃப்ளிப்கார்ட்டில் உள்ள ஆக்சிஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி அட்டைகளில் 10% உடனடி தள்ளுபடி வழங்கப்படும். மேலும், சில வகைகளில் ‘டபுள் தள்ளுபடிகள்’ வழங்குவது குறித்து ஃப்ளிப்கார்ட் தெரிவித்துள்ளது. அதாவது, நீங்கள் கார்டைப் பயன்படுத்தும்போது, தயாரிப்பின் விலையை இன்னும் குறைவாகப் பெறுவீர்கள். உங்களிடம் ஃப்ளிப்கார்ட் பிளஸ் அல்லது பிளாக் உறுப்பினர் இருந்தால், மற்ற வாடிக்கையாளர்களுக்கு முன்பாக விற்பனையின் பலனைப் பெறலாம். கடந்த ஆண்டும், உறுப்பினர்கள் ஒரு நாள் முன்னதாகவே விற்பனை சலுகைகளைப் பயன்படுத்திக் கொண்டனர்.
பிக் பில்லியன் டேஸ் (Big Billion Days) ஸ்மார்ட்போன் டீல்கள்
ஃபிளிப்கார்ட் ஏற்கனவே பிராண்டட் ஸ்மார்ட்போன்கள் பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்த விற்பனையின் முக்கிய அம்சம் ஐபோன் 16 ஆகும், இதற்காக வாடிக்கையாளர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். குறிப்பாக ஐபோன் 17 அறிமுகப்படுத்தப்பட உள்ளதால், நிறுவனம் ஸ்டாக் கிளியர் விலையில் தள்ளுபடி வழங்கலாம். மேலும், சாம்சங் பிரியர்கள் கேலக்ஸி S24 மீது கவனம் செலுத்துகின்றனர், அதே நேரத்தில் மோட்டோரோலாவின் எட்ஜ் 60 ப்ரோ சிறந்த சலுகைகளைப் பெறலாம். இது தவிர, பெரிய ஸ்மார்ட் டிவிகள், சிறந்த லேப்டாப்கள், வாஷிங் மெஷின்கள் மற்றும் ஒன்ல்ப்ளஸ் பட்ஸ் 3 TWS போன்ற பிராண்டட் இயர்பட்களும் மிகப்பெரிய தள்ளுபடியைப் பெறும்.
ஃபிளிப்கார்ட் விற்பனையில் புதிய தயாரிப்புகள்
இது தவிர, புதிய தயாரிப்புகளும் பிளிப்கார்ட் விற்பனையின் கவனத்தை அதிகரிக்கின்றன. சாமசங் கேலக்ஸி S25 Fe, கேலக்ஸி டேப் S11 தொடர் மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 60 போன்ற பல சிறந்த சாதனங்களும் விற்பனையில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் அவற்றைக் கண்காணிப்பது நன்மை பயக்கும்.
எனவே, இந்த பொன்னான வாய்ப்பு நழுவாமல் இருக்க, இப்போதே Flipkart Big Billion Sale-ஐ குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த சிறந்த வாய்ப்பு உங்களுக்கு மீண்டும் கிடைக்காது. இந்த விற்பனை Amazon மற்றும் Flipkart போன்ற பெரிய நிறுவனங்களுக்கு இடையேயான போட்டியாக இருக்கப் போகிறது. பண்டிகைக் காலத்தில் வாடிக்கையாளர்கள் மீண்டும் இதுபோன்ற சலுகைகளைப் பெற வாய்ப்பில்லை.
About the Author
Vijaya Lakshmi