இம்ரான் கான் – நடிகர் ரேகா காதல் கதை.. 40 ஆண்டுகளாக ஒளிந்திருக்கும் மர்மம்.. உண்மை என்ன?

பாலிவுட்டில் “கனவுக்கன்னி” எனப் போற்றப்படும் நடிகை ரேகாவின் தனிப்பட்ட வாழ்க்கை எப்போதும் மர்மங்களும் சுவாரஸ்யங்களும் நிறைந்தது. தமிழ் நடிகர் ஜெமினி கணேசன் – புஷ்பவல்லி தம்பதியின் மகளான ரேகா 1980 களில் ஹிந்தி சினிமாவில் பிரபலமாக இருந்தவர். இந்த நிலையில், பல ஆண்டுகளாக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் அரசியல்வாதி இம்ரான் கானை ரேகா காதலித்ததாக பரவிய கிசுகிசுக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Add Zee News as a Preferred Source

1985-ம் ஆண்டு வெளியான பத்திரிக்கை அறிக்கைகளில் இருவரும் பல பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து, மும்பை கடற்கரையில் நேரத்தை செலவிடுவதாகவும், நெருங்கி பழகி திருமணம் வரை செல்லும் உறவை இருக்கலாம் என்று செய்திகள் வெளியாயின. ரேகாவின் தாயார் புஷ்பவல்லி, இம்ரான் கானை மிகுந்த மதிப்புடன் பார்க்கும் பெண்ணாகவும், மகளுக்கு அவரை பொருத்தமான துணையாக நம்பியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் டெல்லியில் பிரபல ஜோதிடரை சந்தித்து இருவரது ஜாதக பொருத்தத்தையும் ஆராய்ந்ததாக குறிப்பிடப்படுகிறது.

அந்த ஜோதிடன் என்ன சொன்னார் என யாருக்கும் தெரியாது. ஆனால், இம்ரான் கான் தனது மகள் ரேகாவிற்கு ஒரு நல்ல துணையாக இருப்பர் என்பதில் மட்டும் ரேகாவின் தாயார் புஷ்பவல்லி உறுதியாக இருந்தார் என அப்போது வெளியான செய்திகள் கூறுகின்றன.

ஆனால், எல்லா பரபரப்புகளுக்கும் மத்தியில், ரேகா மற்றும் இம்ரான் கான் திருமணம் என முழுமையாக உறுதிப்படுத்தியதில்லை. இருவரும் வாழ்க்கையின் வேறுபட்ட பாதையில் தனித்தனியே சென்றனர். காதல் மற்றும் பிரிவின் காரணங்கள் இன்றுவரை மர்மமாகவே உள்ளது. இது குறித்தும் எங்கேயும் ரோகா மற்றும் இம்ரான் கான் ஆகியோர் உறுதிப்படுத்தவும் இல்லை. எனவே இவை வதந்தியாகவும் மர்மம் நிறைந்ததாகவுமே இருக்கிறது. 

தற்போது சமூக வலைதளங்களில் இந்த பழைய காதல் கதை மீண்டும் பரப்பப்பட்டு, ரசிகர்களில் ஆர்வத்தை தூண்டியுள்ளது. நடிகை ரேகா மற்றும் அரசியல்வாதி இம்ரான் கானின் இந்த உறவு பாலிவுட் வரலாற்றில் ஒரு மர்மமான காதல் கதை என்ற நிலையில் இருந்து வருகிறது.

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.