சஞ்சு vs ஜித்தேஷ்: இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார்? பிளேயிங் லெவன் இதுதான்!

Asia Cup 2025, Cricket News In Tamil: ஆசிய கோப்பை 2025 தொடர் வரும் செப். 9ஆம் தேதி தொடங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெறும் இந்த தொடர் டி20ஐ வடிவில் நடைபெறுகிறது.

Add Zee News as a Preferred Source

Asia Cup 2025: செப். 9 முதல் செப். 28 வரை

இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய அணிகள் ஏ பிரிவில் உள்ளன. இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் ஆகிய அணிகள் பி பிரிவில் உள்ளன. இந்திய அணி அதன் முதல் போட்டியை வரும் செப். 10ஆம் தேதி நடைபெறுகிறது. 

முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் அணியுடன் மோதுகிறது. செப். 14இல் பாகிஸ்தான் அணியுடனும், செப். 19இல் ஓமன் அணியுடனும் இந்தியா விளையாட இருக்கிறது. சூப்பர் 4 சுற்றுக்கு இருப் பிரிவிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் தகுதிபெறும். நிச்சயம் இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெறும் எனலாம். சூப்பர் 4 சுற்றில் ஒரு அணி மற்ற 3 அணிகளுடன் தலா 1 முறை மோதும். இந்த சுற்றில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குச் செல்லும். இறுதிப்போட்டி துபாயில் வரும் செப். 28இல் நடைபெறும்.

Asia Cup 2025: பயிற்சியை தொடங்கிய இந்தியா 

துபாயில் இருக்கும் ஐசிசி அகாடமியில் இந்திய அணி (Team India) ஆசிய கோப்பையை முன்னிட்டு பயிற்சி மேற்கொண்டு வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான முதல் போட்டியை முன்னிட்டு சூர்யகுமார் யாதவ், சுப்மான் கில், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், திலக் வர்மா ஆகியோர் தொடர் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்திய அணியின் பிளேயிங் லெவனில் விக்கெட் கீப்பர் பேட்டராக இடம்பெறப்போவது யார் என்ற கேள்வி எழுந்த நிலையில், அதற்கு இப்போது முக்கிய பதிலும் பயிற்சியின் மூலம் கிடைத்துள்ளது. 

Asia Cup 2025: முதல் விக்கெட் கீப்பர் ஆப்ஷன் யார்?  

விக்கெட் கீப்பராக இருந்து ஓபனராக பேட்டிங் செய்து மூன்று சதங்களை குவித்த சஞ்சு சாம்சன் (Sanju Samson) இந்திய அணியின் முதன்மையான விக்கெட் கீப்பர் ஆப்ஷன் இல்லை. ஜித்தேஷ் சர்மாதான் (Jitesh Sharma) முதல் ஆப்ஷனாக இருக்கிறார். விக்கெட் கீப்பர் பயிற்சியில் ஜித்தேஷ் சர்மாவே அதிகமாக ஈடுபட்டார். சாம்சன் வார்ம்-அப் பயிற்சியில்தான் ஈடுபட்டார், ஜித்தேஷ் சர்மாவே கடினமான விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இதன்மூலம் சஞ்சு சாம்சன் பிரதான பிளேயிங் லெவனில் இடம்பெற மாட்டார் என கூறப்படுகிறது.

Asia Cup 2025: மிரட்டிய மற்ற வீரர்கள் 

பயிற்சியின் முதல் இரண்டு மணிநேரம் கில், அபிஷேக் சர்மா, சூர்யகுமார், ஜித்தேஷ், ரிங்கு சிங், திலக் வர்மா ஆகியோர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். கில்லும், அபிஷேக் சர்மாவும் ஒன்றாக பயிற்சி எடுத்ததன் மூலம் அவர்கள்தான் ஓபனிங்கில் இறங்குவார்கள் என்பது ஓரளவு தெளிவாகி உள்ளது. ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, சிவம் தூபே அவர்களுக்கு பந்துவீசினர். 

குல்தீப், வருண், அக்சர் பட்டேல் ஆகிய சுழற்பந்துவீச்சாளர்களும் பயிற்சியில் ஈடுபட்டனர். அவர்களை திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அதிகமாக எதிர்கொண்டு விளையாடினர். வருண் சக்ரவர்த்தி அதிக பந்துகளை வீசி பயிற்சி எடுத்தார். தொடர்ந்து, அவர் பீல்டிங் பயிற்சியாளர் துலிப் உடன் இணைந்து பீல்டிங்கில் பயிற்சி எடுத்தார். அவர் கடந்த காலங்களில் பீல்டிங்கில் சொதப்பியிருந்ததால் அதனை சீர்செய்ய தற்போது கடினமாக பயிற்சி எடுக்கிறார்.

Asia Cup 2025: இந்திய அணி

உத்தேச பிளேயிங் லெவன்: சுப்மான் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.