சுப்மன் கில் தலைமையில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்த இந்திய கிரிக்கெட் அணி, ஆண்டர்சன் – டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் 5 போட்டிகளில் 2 – 2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்து திரும்பியது. தொடர் நடுவில் 1-2 என பின்தங்கிய நிலையில், கடைசி 5வது டெஸ்ட்டில் அசத்தலான வெற்றியுடன் இந்தத் திருப்பமான முடிவை பதிவு செய்தது அனைவரிடமும் பெரும் பாராட்டை பெற்றது.
Add Zee News as a Preferred Source
கே.எல் ராகுல், முகமது சிராஜ் திரும்பும் அறிவிப்பு
இந்த தொடரில் கே.எல். ராகுல் சிறப்பான பேட்டிங்குடன் 532 ரன்கள் (2 சதங்கள் உட்பட) குவித்தார். முகமது சிராஜ் பந்துவீச்சில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடரில் அதிக விக்கெட் எடுத்து பெரும் சாதனை படைத்தார். இந்த இருவரும் தற்போது ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் இல்லை என்பதால் அவர்கள் அடுத்த எப்போது திரும்புவார்கள் என்ற எதிர்பார்ப்பு உயர்ந்தது.
இதில், இந்தியா ‘ஏ’ அணியில் அவர்கள் செப்டம்பர் 23 முதல் நடைபெறும் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிரான தொடரில் மீண்டும் விளையாட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் நான்கு நாள் கொண்ட 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளது. தொடர் செப்டம்பர் 16 முதல் துவக்கமாகிறது.
இந்தியா ‘ஏ’ அணியின் அமைப்பு
இந்த தொடருக்கான இந்தியா ‘ஏ’ அணிக்கு ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாகவும், துருவ் ஜுரேல் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அணியில் சாய் சுதர்சன், நாராயணன் ஜெகதீசன், தேவ்தத் படிக்கல், நிதீஷ் ரெட்டி, பிரசித் கிருஷ்ணா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்திய ஏ அணி: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன், என் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், துருவ் ஜூரல் (துணை கேப்டன் & விக்கெட் கீப்பர்), தேவ்தத் பாடிக்கல், ஹர்ஷ் துபே, ஆயுஷ் படோனி, நிதிஷ் குமார் ரெட்டி, தனுஷ் கோட்டியன், பிரசித் குமார், குர்னூர் ப்ரார், கலீல் அகமது, மானவ் சுதர், யாஷ் தாக்கூர்.
About the Author
R Balaji