ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நக்சலைட் ஜார்க்கண்ட் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை

சாய்பாஸா: ஜார்​க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்​பும் மாவட்​டத்​தில் உள்ள சரண்டா வனப்​பகு​தி​யில் நடை​பெற்ற என்​க​வுன்ட்​டரில் அமித் ஹஸ்தா என்ற நக்​சலைட் சுட்​டுக்கொல்​லப்​பட்​டார். இவரது தலைக்கு ரூ.10 லட்​சம் பரிசு அறிவிக்​கப்​பட்​டிருந்​தது.

நக்​சல் ஒழிப்பு பணியை மத்​திய அரசு தீவிர​மாக மேற்​கொண்​டுள்​ளது. சத்​தீஸ்​கர் மற்​றும் ஜார்க்​கண்ட் மாநில வனப்​பகு​தி​களில் நக்​சலைட்​களை முற்​றி​லும் ஒழிப்​ப​தற்​கான பணி​கள் இறுதி கட்​டத்தை எட்​டி​யுள்​ளன. இதற்​கான தேடுதல் வேட்​டை​யில் மத்​தி​யப் படையினர், மாநில போலீ​ஸார் தீவிர​மாக ஈடு​பட்​டுள்​ளனர்.

இந்த நிலையில், ஜார்​க்கண்ட் மாநிலத்​தின் பலாமு மாவட்​டத்​தில் உள்ள கேதல் கிராமத்​தில் நடை​பெறும் கர்மா திரு​விழா​வில், நக்​சலைட் கமாண்​டர் சசி​காந்த் கன்ஜு என்​பவர் கடந்த 3-ம் தேதிவரு​வ​தாக உளவுத் தகவல் கிடைத்​தது. இதையடுத்து, நக்சல் தடுப்பு போலீ​ஸார் அங்கு தேடு​தல் வேட்டை நடத்​தினர். போலீஸாரை பார்த்​ததும் நக்​சல் குழு​வினர் துப்​பாக்கி சூடு நடத்​தினர். இதில் 2 போலீ​ஸார் உயிரிழந்​தனர். ஒருவர் காயம் அடைந்​தார்.

இதையடுத்து, நக்​சல் கும்பலை வேட்​டை​யாட தீவிர தேடுல் வேட்டை மேற்​கொள்​ளப்​பட்​டது.மேற்கு சிங்​பும் மாவட்​டத்தின் சரண்டா வனப்​பகு​தி​யில் பாதுகாப்பு படை​யினர் தேடு​தல் வேட்டை மேற்​கொண்​ட​போது சாய்​பாசா என்ற இடத்​தில் நக்சல் நடமாட்​டம் கண்​டறியப்​பட்​டது. அந்த இடத்தை பாது​காப்பு படை​யினர் சுற்றி வளைத்து துப்​பாக்கி சூடு நடத்​தினர். இதில் ‘திரி​தியா சம்​மேளன் பிரஷ்துதி குழு (டிஎஸ்​பிசி) என்ற நக்​சல் அமைப்​பின் மண்டல கமாண்​ட​ராக செயல்​பட்ட அமித் ஹஸ்தா என்ற ஆப்​தன் சுட்​டுக் கொல்​லப்​பட்​டார். இவரது தலைக்கு ரூ.10 லட்​சம் பரிசு அறிவிக்​கப்​பட்​டிருந்​தது குறிப்​பிடத்​தக்​கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.