இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா வரும் அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஒருநாள் தொடரின் மூலம் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் களமிறங்க இருக்கின்றனர். இருவரும் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், இந்த ஒருநாள் தொடரில் அவர்கள் கலந்து கொள்வது ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
Add Zee News as a Preferred Source
ஆனால், இந்த ஆஸ்திரேலியப் பயணம் இருவருக்கும் சர்வதேச அரங்கில் கடைசி ஆட்டமாக இருக்கக்கூடும் என்ற தகவலும் வெளியாகி வருகிறது. ரோகித் சர்மாவுக்கு 37 வயதும், விராட் கோலிக்கு 36 வயதும் ஆகி உள்ளதால், உடற்தகுதி குறித்து அவர்கள் கவனம் செலுத்தி வருகிறார்கள். இருவரும் 2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை தொடர விருப்பம் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த நிலையில், 2027 உலகக் கோப்பைக்காக அதிக நேரம் பயிற்சி மற்றும் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்பது அவசியம் என்று முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் டாரில் கல்லினன் கூறுகிறார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, அவர்கள் திறமை மற்றும் அனுபவத்தில் குறைபாடு இல்லை என்றாலும், சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதற்கு முன்னதாக உள்ளூர் போட்டிகளில் கலந்து கொண்டு, இருவரும் மனதளவிலும் உடல் தகுதியிலும் சீராக இருக்க வேண்டும்.
நான் பயிற்சியாளராகவோ அல்லது தேர்வாளராகவோ இருந்தால், ஒரு வீரரிடம் எவ்வளவு திறமை இருந்தாலும், சில போட்டிகளில் மட்டும் விளையாடிவிட்டு பயிற்சி செய்யாமல், பின்னர் சிறப்பாக செயல்பட முடியும் என கூறுவது சரியாக இருகாது என சொல்லிவிடுவேன் என அவர் கூறினார்.
டிசம்பர்-ஜனவரி மாதங்களில் விஜய் ஹசாரே கோப்பை நடைபெற உள்ளது. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஜனவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்பாக இந்த தொடரில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆஸ்திரேலியா ஏ-க்கு எதிரான இந்தியா A அணியில் ரோஹித் மற்றும் கோலி பங்கேற்க வேண்டும் என கிரிக்கெட் வல்லுனர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
இவற்றை தொடர்ந்து, சர்வதேச கிரிக்கெட்டில் போட்டி நிலை மிகவும் கடுமையாக இருக்கும். காரணமாக, உடல் மற்றும் மனரீதியில் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும். அதை அடைவதற்கு, அவர்களுக்கு தொடர்ந்து அதிகமான போட்டிகள் மற்றும் பயிற்சி தேவைப்படுகிறது. அதனால், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இருவரும் தகுதிப் பெறும் வகையில் அதிகமாக கிரிக்கெட் விளையாடுவது மிக அவசியம். மேலும் கில்லுக்கு கேப்டன் பதவியை வழங்க வேண்டும் என்று கல்லினன் கூறி இருக்கிறார்.
ரோஹித் மற்றும் கோலி போன்ற உலக புகழ்பெற்ற வீரர்கள் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தொடர்ந்து நிறைவை வழங்க முயற்சி செய்ய வேண்டும். மார்ச் மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிராக சாம்பியன்ஸ் டிராப்பி இறுதி போட்டிக்குப் பிறகு அவர்கள் சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
About the Author
R Balaji