என்னை பஞ்சாப் அணி அவமானப்படுத்தியது.. மனமுடைந்து வெளியேறினேன் – கிறிஸ் கெயில்!

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் பிரமுக கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் 2012 மற்றும் 2016 ஐசிசி டி20 உலகக் கோப்பைகள் வென்றவராகவும், டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த புகழ்பெற்று வீரராகவும் விளங்குகிறார். ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு முக்கிய பங்கு வகித்த இவர், 2018 முதல் 2021 வரை பஞ்சாப் அணிக்காக விளையாடினார்.

Add Zee News as a Preferred Source

2018-ம் ஆண்டு பஞ்சாப் அணி வாங்கப்பட்ட கிறிஸ் கெய்ல், சற்று தடுமாற்றத்துடனேயே விளையாடினார். அதன் காரணமாக ஒரு கட்டத்திற்கு பின்,  பஞ்சாப் அணி நிர்வாகம் அவரை மூன்றாவது இடத்தில் களமிறக்கியது. அந்த வாய்ப்பையும் சிறப்பாக பயன்படுத்த கிறிஸ் கெய்ல் தவறியதால், அவர் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். அவருக்கு பஞ்சாப் அணியில் ஒரு நிலையான வாய்ப்பும் ஆதரவும் கிடைக்கவில்லை என்றே கூற்லாம். இதன் காரணமாக விரக்தியடைந்த கெய்ல், 2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் நடந்து கொண்டிருக்கும்போதே பாதியில் பஞ்சாப் அணியில் இருந்து வெளியேறுவதாக அறிவுத்தார். 

இந்த நிலையில், பஞ்சாப் அணி அவமானப்படுத்தி தன்னை வெளியேற வைத்ததாக கிறிஸ் கெய்ல் கூறி இருக்கிறார். இவரது கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக பேசிய கிறிஸ் கெய்ல், “என் ஐபிஎல் பயணம் பஞ்சாப் அணியால் முன்கூட்டியே முடிந்துவிட்டது. நான் அணிக்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் விளையாடினேன். ஆனாலும், அவர்கள் என்னை குழந்தையாக நடத்தி, மனச்சோர்வை ஏற்படுத்தினர். நான் மன அழுத்தத்தில் விழுந்தேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், பணத்தை விட மன அமைதி முக்கியம். பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவை அழைத்து நான் வெளியேறுவதாக கூறினேன். மும்பைக்கு எதிரான என்னுடைய கடைசி போட்டிக்கு பின் தொடர்ந்து விளையாடினால் என்னை நானே பாதித்து கொள்வேன் என்று உணர்ந்தேன். அதனால் உடைந்துபோன நான் அனில் கும்ப்ளேவை அழைத்து பேசினேன். ஏனெனில் அவராலும் பஞ்சாப் அணி நகர்ந்த விதத்தாலும் நான் ஏமாற்றமடைந்தேன். என்னை அழைத்து கே.எல். ராகுல் பேசினார். கொஞ்சம் பொறுங்கள், அடுத்த போட்டியில் நீங்கள் விளையாடுவீர்கள் என அவர் கூறினார். அதற்கு, உங்களுக்கு வாழ்த்துக்கள் என அவரிடம் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றேன் என கிறிஸ் கெய்ல் கூறினார். 

ஐபிஎல் சாதனைகள்  
– 41 போட்டிகளில் 1304 ரன்கள்  
– அதிரடி டி20 வீரராக பஞ்சாப் அணியுடன் விளங்கினார்  
– ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிலும் அவரது சாதனைகள் அதிகம்  
– அவமானம் மற்றும் மன அழுத்தம் காரணமாக வெளியேறிய காலம் அவரது கேரியரின் கடைசி பகுதி

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.