ADAS பெற்ற டாடா நெக்ஸான்.EV விற்பனைக்கு ரூ.17.29 லட்சத்தில் அறிமுகம்

டாடா மோட்டார்ஸ் இந்தியாவின் பயணிகள் எலக்ட்ரிக் விற்பனையில் முதன்மையாக உள்ள நிலையில் பிரசத்தி பெற்ற நெக்ஸான.EV மாடலில் கூடுதலாக வெளியிட்டுள்ள லெவல்-2 ADAS மூலம் புதிய வாடிக்கையாளர்களை குறிப்பாக பிரீமியம் பாதுகாப்பினை விரும்புபவர்களுக்கு ஏற்றதாக வெளிவந்துள்ளது.

நெக்‌ஸான்.ev டாப் Empowered + A என்ற வேரியண்டின் அடிப்படையில் 45Kwh பேட்டரி பேக் பெற்று லெவல்-2 ADAS மூலமாக போக்குவரத்து அடையாளங்களை உணர்ந்து செயல்படுவதுடன், பயணிக்கின்ற லேனின் மையப்படுத்தல் அமைப்பு, லேன் புறப்பாடு எச்சரிக்கை, லேன் அசிஸ்ட் உதவி, முன்புற மோதல் தடுக்கும் எச்சரிக்கை, தானியங்கி முறையில் செயல்படும் அவசரகால பிரேக்கிங் மற்றும் ஹைபீம் உதவி ஆகியவற்றுடன் பாதசாரிகள், சைக்கிள் ஓட்டுபவர்கள் மற்றும் வாகன கண்டறிந்து சூழ்நிலைகளுக்கு ஏற்ப தானியங்கி முறையில் உதவுகின்ற அமைப்பினை பெற்றுள்ளது.

கூடுதலாக ரியர் சன் ஷேட் மற்றும் ஆம்பியனட் லைட்டிங் போன்றவற்றை பெற்றிருப்பதுடன் ரெட் டார்க் மற்றும் டார்க் எடிசன் என இரண்டிலும் கிடைக்கின்றது.

  • Empowered +A 45 – ₹ 17.29 லட்சம்
  • Empowered +A 45 DARK – ₹ – 17.49 லட்சம்
  • Empowered +A 45 RED DARK – ₹ 17.49 லட்சம்

(Ex-showroom)

ARAI சோதனை அறிக்கையின் படி, Nexon EV 45 kWh பேட்டரி மாடல் ரேஞ்ச் 489 கிலோமீட்டர் வரை இருக்கும், டாடா வெளியிட்டுள்ள உண்மையான பயணிக்கின்ற ரேஞ்ச் 350 முதல் 370 கிலோமீட்டர் வரை இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.

டிஜிட்டல் கிளஸ்ட்டர், 360 டிகிரி கேமரா, கனெக்ட்டிவ் கார் தொழில்நுட்பம், பின்புற ஏசி வென்ட்களுடன் கூடிய ஏசி கட்டுப்பாடு மற்றும் முழுமையான எல்இடி விளக்குகள் உள்ளது.


டாடா நெக்ஸான்.EV ADASடாடா நெக்ஸான்.EV ADAS

Related Motor News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.