Amazon Great Indian Festival Sale 2025: ஆன்லைன் விற்பனை தளமான அமேசான், அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2025 -க்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அமேசான் இந்த சேலின் தேதியை அறிவித்துள்ளது. இந்த மெகா விற்பனை செப்டம்பர் 23, 2025 முதல் தொடங்கும். அமேசான் பிரைம் உறுப்பினர்கள் 24 மணி நேரத்திற்கு முன்பே, அதாவது செப்டம்பர் 22 முதல் இந்த சேலுக்கான பிரத்யேக அணுகலைப் பெறுவார்கள்.
Add Zee News as a Preferred Source
Amazon Great Indian Festival Sale 2025: ஸ்மார்ட்போன்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் சிறந்த சலுகைகள்
இந்த பண்டிகை கால விற்பனையில், அமேசான் பல பிரிவுகளில் வாடிக்கையாளர்களுக்கு பெரும் தள்ளுபடிகளை வழங்க உள்ளது. இதில், ஸ்மார்ட்போன்களில் 40% வரை, டிவிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களில் 65% வரை தள்ளுபடி கிடைக்கும். மேலும், ஃபேஷன், அழகு சாதனங்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் 80% வரை தள்ளுபடி வழங்கப்படும். இந்த விற்பனையில், சாம்சங், ஆப்பிள், ஒன்பிளஸ் போன்ற பிரபலமான பிராண்டுகளின் பொருட்களிலும் சிறந்த சலுகைகள் கிடைக்கும். மேலும், சில புதிய பொருட்களும் இந்த அமேசான் சேலில் அறிமுகம் செய்யப்படலாமென கூறப்படுகின்றது. இவை தவிர விமான டிக்கெட்டுகளில் 15% வரை தள்ளுபடி, ஹோட்டல் புக்கிங்கில் 40% வரை தள்ளுபடி, பேருந்து டிக்கெட்டுகளில் 15% தள்ளுபடி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Amazon Great Indian Festival Sale 2025: நாடு முழுவதும் விரைவான டெலிவரி
இந்த முறை டெலிவரி நெட்வொர்க் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக அமேசான் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் விரைவான டெலிவரி செய்ய, புதிய நிலையங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. திருச்சிராப்பள்ளி, போர்ட் பிளேர், ராஞ்சி, ரேபரேலி, ஸ்ரீநகர், புலந்த்ஷஹர், ஹவுரா மற்றும் சில்சார் போன்ற இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் 45 புதிய டெலிவரி நிலையங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இப்போது நிறுவனம் நாடு முழுவதும் சுமார் 2,000 கடைசி மைல் டெலிவரி நிலையங்களை இயக்கி வருகிறது.
Amazon Great Indian Festival Sale 2025: 17 லட்சத்திற்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள்
சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் உட்பட 17 லட்சத்திற்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் இந்த மெகா விற்பனையில் பங்கேற்பார்கள். அவர்களை ஆதரிக்க, அமேசான் AI -ஆல் இயங்கும் ‘சம்ரிதி டேஷ்போர்டை’ அறிமுகப்படுத்தியுள்ளது. இது சரக்கு, செயல்திறன் மற்றும் விற்பனை தொடர்பான நிகழ்நேர தகவல்களை வழங்குகிறது.
Amazon Great Indian Festival Sale 2025: விற்பனையின் கடைசி தேதி என்ன?
விற்பனையின் கடைசி தேதியை அமேசான் இன்னும் அறிவிக்கவில்லை. இந்த விற்பனை ஸ்டாக் தீரும் வரை தொடரக்கூடும் என்றும் கூறப்படுகின்றது. புதிய ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, மின்னணு சாதனங்கள், வீட்டு உபயோக பொருட்களை வாங்கும் எண்ணத்தில் உள்ளவர்கள் இந்த சேலை தவறவிடாமல் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.
About the Author
Sripriya Sambathkumar