Flipkart Big Billion Days Sale 2025: பிரபல ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் தனது அடுத்த மெகா விற்பனைக்காக தயாராகி வருகின்றது. நவராத்திரி தொடக்கம் முதல் ஆன்லைன் வலைத்தளங்களின் விற்பனையும் தொடங்கும். ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த சேல்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
Add Zee News as a Preferred Source
ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2025
பிளிப்கார்ட்டின் பண்டிகை கால விற்பனையான ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2025, செப்டம்பர் 23, 2025 முதல் தொடங்குகிறது. இந்த விற்பனையில், பல வகையான பொருட்களில் பெரிய அளவிலான தள்ளுபடிகளைப் பெறலாம். வாடிக்கையாளர்கள் இப்போதே தங்கள் ஷாப்பிங் லிஸ்டை தயாராக வைத்துக்கொல்ளலாம். பிளிப்கார்ட்டின் இந்த விற்பனையில், ஸ்மார்ட்போன்கள், முதன்மை ஐபோன்கள், ஸ்மார்ட் டிவிகள் முதல் OnePlus Buds வரை பல அதிநவீன மற்றும் கவர்ச்சிகரமான பொருட்களில் அதிரடி தள்ளுபடிகள் மூலம் அதிகம் சேமிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
Flipkart Big Billion Days Sale 2025: எதில் எவ்வளவு தள்ளுபடி கிடைக்கும்?
ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் Flipkart Big Billion Days Sale இன் அதிகாரப்பூர்வ பக்கத்தில், iPhone 16, Sony Smart TV, Samsung laptop, OnePlus Buds 3, Samsung இன் முதன்மை ஸ்மார்ட்போன், முதன்மை வாஷிங் மெஷின் மற்றும் இன்னும் பல பொருட்களை மலிவாக வாங்க வாய்ப்பு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த பொருட்களுக்கான டீல் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த பொருட்களை வாங்க எண்ணம் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்கள் முழு தகவலுக்கு சிறிது நேரம் காத்திருக்க வேண்டும். பிக் பில்லியன் டேஸ் சேலில், iPhone 16 Pro, iPhone 16 Pro Max முதல் Samsung Galaxy S24, Oppo K13x 5G, Oppo K13, Moto G96, Motorola Edge 60 Pro மற்றும் Realme வரையிலான பல ஸ்மார்ட்போன்களில் பம்பர் தள்ளுபடிகள் கிடைக்கும் என கூறப்படுகின்றது.
Flipkart Big Billion Days Sale 2025: முதன்மை அணுகல் இவர்களுக்கு கிடைக்கும்
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் தனியாக ஒரு டீல் ஜோனும் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த Deals Zone -இல் Festive Rush Hour, Double Discounts, Steal Deals, Lower price Live, tick Tock Deals மற்றும் Tyohar Drops ஆகியவை அடங்கும். வாடிக்கையாளர்கள் இந்த டீல்கள் மூலம் பல நல்ல பொருட்களை மலிவான விலையில் பெறலாம். இது தவிர, ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி அட்டைகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடியைப் பெறலாம்.
இது மட்டுமல்லாமல், பிளிப்கார்ட் பிளஸ் மற்றும் பிளாக் உறுப்பினர்களாக இருக்கும் வாடிக்கையாளர்கள், 24 மணி நேரத்திற்கு முன்பே விற்பனையை அணுகலாம் என்று தளத்தில் கூறப்பட்டுள்ளது. பிளிப்கார்ட்டின் இந்த சலுகையின் காரணமாக, விற்பனை தொடங்கும் முன்னரே இந்த உறுப்பினர்கள் பல ஆடம்பரமான டீல்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
About the Author
Sripriya Sambathkumar