UAE அணியை ஊதித்தள்ளிய இந்தியா… குல்தீப், தூபே மிரட்டல் பந்துவீச்சு!

Asia Cup 2025, India vs UAE: ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மற்றும் அபுதாபி மைதானங்களில் நடைபெற்று வருகிறது. முதல் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஏ பிரிவில் இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் இன்று துபாயில் மோதின.

Add Zee News as a Preferred Source

India vs UAE: சாம்சனுக்கு வாய்ப்பு

2வது லீக் போட்டியான இதில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். யாருமே எதிர்பார்க்காத வகையில் சஞ்சு சாம்சனுக்கு இன்று வாய்ப்பு வழங்கப்பட்டது. குல்தீப் யாதவ், சிவம் தூபே, பும்ரா ஆகியோரும் பிளேயிங் லெவனில் இடம்பெற்றனர். அர்ஷ்தீப் சிங்கிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவர் அடுத்த போட்டியில் திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.

India vs UAE: ஒரே ஓவரில் குல்தீப் 3 விக்கெட்

தொடர்ந்து முதலில் பந்துவீசியது. இந்திய அணி பவர்பிளே ஓவர்களிலேயே மிரட்டலான பந்துவீச்சை வெளிக்காட்டியது. பும்ரா, வருண் சக்ரவர்த்தி தலா 1 விக்கெட்டை வீழ்த்த பவர்பிளே முடிவில் ஐக்கிய அரபு அமீரகம் அணி 41 ரன்களை எடுத்தது. பவர்பிளேவுக்கு பின் இந்தியா அசுரத்தனமாக அட்டாக் செய்தது. அதுவும் 9வது ஓவரை வீசிய குல்தீப் யாதவ் மூன்று விக்கெட்டை கைப்பற்றி அதிர்ச்சி கொடுத்தார்.

India vs UAE: சிவம் தூபே கலக்கல்

அடுத்து வந்த சிவம் தூபே, அக்சர் பட்டேல் தொடர்ந்து விக்கெட் எடுத்தனர். கடைசி விக்கெட்டையும் குல்தீப் தூக்க 13.1 ஓவரிலேயே ஐக்கிய அரபு அமீரகம் அணி 57 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. அதிகபட்சமாக அலிஷான் ஷராஃபு 22, முகமது வசீம் 19 ரன்களை அடித்தனர். குல்தீப் 4, சிவம் தூபே 3, அக்சர் பட்டேல் மற்றும் வருண் சக்ரவர்த்தி தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

India vs UAE: பவர்பிளேவில் முடிந்த சேஸிங்

வெறும் 58 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா பவர்பிளே ஓவர்களிலேயே விக்கெட் ஏதும் இன்றி வெற்றியை குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதே வேகத்தில் இந்திய அணியின் ஓபனர்கள் சுப்மான் கில் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் அதிரடி காட்டினர். 16 பந்துகளில் 2 பவுண்டரிகள், 3 விக்கெட்டுகள் 30 ரன்களுடன் அபிஷேக் சர்மா, ஜூனைத் சித்திக் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

India vs UAE: குல்தீப் ஆட்ட நாயகன்

அடுத்து சூர்யகுமார் யாதவ் களமிறங்கிய ஆட்டத்தை முடித்துவைக்க உதவினார். அவரும் தன் பங்குக்கு சிக்ஸர் அடித்தார். இதனால், இந்தியா 4.3 ஓவர்களிலேயே இலக்கை அடைந்து பெரய வெற்றி. ஆட்டமிழக்காமல் இருந்த சுப்மான் கில் 20 (9), சூர்யகுமார் 7 (2) ஆகியோர் ரன்களை எடுத்தனர். இதன்மூலம் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை 4 விக்கெட்டை வென்ற குல்தீப் வென்றார். 

A dominating show with the bat

-wicket win for #TeamIndia after chasing down the target in 4.3 overs

Scorecard https://t.co/Bmq1j2LGnG#AsiaCup2025 | #INDvUAE pic.twitter.com/ruZJ4mvOIV

— BCCI (@BCCI) September 10, 2025

India vs UAE: அடுத்தடுத்த போட்டிகள்?

ஏ பிரிவில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. ஏ பிரிவில் பாகிஸ்தான் – ஓமன் அணிகள் நாளை மறுதினம் (செப். 12) துபாயில் மோதுகின்றன. நாளைய தினம் (செப். 11) வங்கேதேசம் – ஹாங் காங் அணிகள் அபுதாபியில் மோதுகின்றன. இந்தியாவுக்கு அடுத்த போட்டி வரும் ஞாயிறு (செப். 14) அன்று பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற இருக்கிறது. இந்த போட்டி துபாயில் நடைபெறுகிறது. இந்த மூன்று போட்டிகளும் இந்திய நேரப்படி Sony Network சேனலிலும், Sonyliv செயலிலும் இரவு 8 மணிக்கு நேரலையில் காணலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.