ஆசிய கோப்பை தொடர் கடந்த 9ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 7 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ள நிலையில், இந்திய அணி 2 போட்டிகளில் விளையாடி இருக்கிறது. ஒன்று யுஏஇ அணியுடனும் மற்றொரு போட்டியில் பாகிஸ்தான் அணியுடனும் விளையாடியது. இந்த இரண்டு போட்டியிலுமே இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில், இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நேற்று (செப்டம்பர் 14) பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஓரு மாபெரும் சாதனை படைத்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கு அடுத்து இரண்டாவது இந்திய வீரராக ஹர்திக் பாண்டியா இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார்.
Add Zee News as a Preferred Source
ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி
நேற்று (செப்டம்பர் 14) நடைபெற்றது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் பேட்டிங் செய்தது. ஆனால் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஃபர்கான் 40 ரன்களும் ஷாஹீன் அப்ரிடி 33 ரன்களும் அடித்தனர்.
இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 128 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. அதனை 15.5 ஓவர்களிலேயே இந்திய அணி அடித்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ், 47, திலக் வர்மா மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தலா 31 ரன்களும் அடித்தனர்.
இந்த நிலையில், நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா இப்போட்டியின் மூலம் ஓர் சாதனையை படைத்திருக்கிறார். அதாவது, பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் சயின் அயூபை தான் வீசிய முதல் பந்திலேயே வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
முன்னதாக இந்திய அணியின் வேகபந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார். தற்போது இவருக்கு அடுத்தப்படியாக ஹர்திக் பாண்டியா இந்த சாதனை படைத்திருக்கிறார்.
About the Author
R Balaji