சென்னை: பாமக தலைவர் அன்புமணிதான், அன்புமணிக்கே மாம்பழம் சின்னம் என இந்திய தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளதாக பாமக பாலு விளக்கம் அளித்தார். அதற்கான ஆதாரங்கள் என கடிதங்களையும் செய்தியாளர்களிடம் காட்டினார். பாமகவில் தந்தை மகனுக்கு இடையே எழுந்துள்ள மோதல் காரணமாக பாமக இரண்டாக சிதறுண்டு கிடக்கிறது. பாமகவில் இருந்து அன்புமணியை முழுமையாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், அவர்மீது ஏராளமான குற்றச்சாட்டுக்களை கூறி உள்ளார். மேலும், விரைவில் பாமக பொதுக்குழு கூட்டப்பட இருப்பதாகவும் அறிவித்துள்ளார். […]