புலவாயோ,
நமீபியா கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி புலவாயோவில் இன்று நடந்து வருகிறது.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற நமீபியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து ஜிம்பாப்வேயின் தொடக்க வீரர்களாக பிரையன் பென்னட் மற்றும் தடிவனாஷே மருமணி ஆகியோர் களம் கண்டனர்.
இதில் தடிவனாஷே மருமணி நிதானமாக ஆட மறுபுறம் பிரையன் பென்னட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். இதில் தடிவனாஷே மருமணி 62 ரன்னில் அவுட் ஆனார். மறுபுறம் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பென்னட் 94 ரன்களில் அவுட் ஆனார்.
இறுதியில் ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 211 ரன்கள் குவித்தது. நமீபியா தரப்பில் அலெக்சாண்டர் வோல்ஷெங்க் 2 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 212 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நமீபியா ஆடி வருகிறது.