சிவகங்கை: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளதால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளின் வாக்குகளும் சிதறும் என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம், இன்று மானாமதுரை அருகே கட்டிக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ப.சிதம்பரம் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.53.50 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியில், கார்த்தி சிதம்பரம் எம்.பி. அடிக்கல் நாட்டினார். ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட […]