IND vs PAK: சர்ச்சையில் சிக்கிய இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ்! என்ன ஆனது?

அனைவரும் அதிகம் எதிர்பார்த்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை போட்டி தற்போது நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றியை பதிவு செய்துள்ளது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் மட்டுமே அடித்தது. எளிய இலக்கை எதிர்த்து ஆடிய இந்திய அணி 16 ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை குல்தீப் யாதவ் வென்றுள்ளார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் கடைசி வரை விளையாடி 47 அடித்துள்ளார்.

Add Zee News as a Preferred Source

இந்தியா – பாகிஸ்தான்: தொடரும் சர்ச்சை! 

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட அரசியல் பிரச்சினை காரணமாக இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் விளையாட கூடாது என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். மேலும் ஆசிய கோப்பை தொடரிலிருந்து இந்திய அணி வெளியேறும் என்றும் கூறப்பட்டது. ஆனால் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே குரூப்பில் இடம்பெற்று இருந்தது. 

கை கொடுக்க மறுத்த சூர்யகுமார் யாதவ்!

பொதுவாக ஒரு போட்டியில் டாஸ் முடிந்த பிறகு இரு அணிகளின் கேப்டன்களும் கை கொடுப்பது வழக்கம். ஆனால் நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் டாஸ் வென்ற பிறகு சூரியகுமார் யாதவ் கை கொடுக்க மறுத்துள்ளார். அதேபோல போட்டி முடிந்த பின்பும் இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் அணியுடன் கை கொடுக்கவில்லை. இந்திய அணி வீரர்களுக்காக மைதானத்தில் காத்திருந்த பாகிஸ்தான் வீரர்கள், பிறகு கை கொடுக்க வரவில்லை என்பதை தெரிந்தும் அவர்களும் மைதானத்தை விட்டு வெளியேறினார்கள். இந்த போட்டியின் வெற்றியை இந்தியாவின் ராணுவ வீரர்களுக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளார் கேப்டன் சூர்யகுமார் யாதவ்.

We stand by the victims of the families of Pahalgam terror attack. We express our solidarity. We want to dedicate today’s win to all our Armed Forces who showed a lot of bravery. Hope they continue to inspire us all and we give them more reasons on the ground whenever we get an… pic.twitter.com/stkrqIEBuE

— BCCI (@BCCI) September 14, 2025

கேப்டன் சூர்யா குமார் யாதவ் பேச்சு

“இது சிறந்த உணர்வு மற்றும் இந்தியாவிற்கு ஒரு சரியான ரிட்டர்ன் பரிசு. ஒன்று சொல்ல விரும்பினேன். சரியான சந்தர்ப்பம், நேரத்தை எடுத்துக் கொண்டு, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நாங்கள் துணை நிற்கிறோம். எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம். நிறைய துணிச்சலை காட்டிய எங்கள் அனைத்து ஆயுதப்படைகளுக்கும் வெற்றியை அர்ப்பணிக்க விரும்புகிறோம். அவர்கள் தொடர்ந்து நம் அனைவரையும் ஊக்குவிப்பார்கள் என்று நம்புகிறோம், மேலும் அவர்களை சிரிக்க வைக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மைதானத்தில் அவர்களுக்கு கூடுதல் காரணங்களை வழங்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.

“எங்கள் அரசாங்கமும் பிசிசிஐயும் இணக்கமாக இருந்தன. ஒன்றாக, நாங்கள் இங்கு வந்தோம், ஒரு முடிவை எடுத்தோம், நாங்கள் விளையாட்டை விளையாடுவதற்காக மட்டுமே இங்கு வந்ததாக உணர்கிறேன். நாங்கள் அவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தோம். வாழ்க்கையில் சில விஷயங்கள் விளையாட்டு வீரர்களின் மன உறுதியை விட முன்னணியில் இருப்பதாக நான் உணர்கிறேன். நான் ஏற்கனவே அதற்கு பதிலளித்துள்ளேன். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருடனும் நாங்கள் உண்மையில் நிற்கிறோம். மேலும் அவர்களின் குடும்பத்தினருடனும் நாங்கள் நிற்கிறோம், எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம்.  மேலும், நான் சொன்னது போல், இந்த வெற்றியை ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்ற எங்கள் துணிச்சலான ஆயுத படைகளுக்கு அர்ப்பணிக்கிறோம். அவர்கள் தொடர்ந்து நம் அனைவருக்கும் ஊக்கமளிப்பதால், முடிந்தால், அவர்களுக்கும் ஊக்கமளிக்க வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்” என்று மேலும் பேசி உள்ளார்.

 

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.