தனுஷ் இயக்கி நடித்திருக்கும் `இட்லி கடை’ திரைப்படம் அக்டோபர் 1-ம் தேதி திரைக்கு வருகிறது.
அருண் விஜய், ராஜ்கிரண், சத்யராஜ், நித்யா மேனன், ஷாலினி பாண்டே எனப் பலரும் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் மியூசிக் போட்டிருக்கிறார்.

மிகுந்த எதிர்பார்ப்பு நிலவும் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்றது.
படக்குழுவினர் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு படத்தைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர்.
தனுஷிடம் தொகுப்பாளர், “தனுஷ் எனச் சொன்னால் எங்களுக்குப் பல நினைவுக்கு வரும். தனுஷ் என்றதும் உங்கள் நினைவுக்கு வரும் விஷயம் என்ன?” எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதில் தந்த தனுஷ், “எனக்கு தனுஷ் என்றதும் நல்ல தகப்பன் என்பதுதான் என் நினைவுக்கு வரும்.

பல விஷயங்களில் நான் என்னைப் பற்றி பெருமையாகச் சொல்லிக்கொள்ளமாட்டேன். இந்த ஒரு விஷயத்தில் நான் நெஞ்சை நிமிர்த்தி பெருமையாகச் சொல்வேன். நான் ஒரு நல்ல தகப்பன்” என்றவர் தன்னுடைய இளைய மகன் லிங்காவுடன் இசை வெளியீட்டு விழா மேடையில் நடனமும் ஆடினார் தனுஷ்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…