நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான தேவநாதனுக்கு நிபந்தனையுடன் இடைக்கால ஜாமீன்

சென்னை: தனி​யார் நிதி நிறுவன மோசடி வழக்​கில் கைதாகி ஓராண்​டுக்​கும் மேலாக சிறை​யில் உள்ள தேவ​நாதன் யாதவ் தனது சொந்​தப் பணம் ரூ.100 கோடியை விசா​ரணை நீதி​மன்​றத்​தில் டெபாசிட் செய்ய வேண்​டும் என்ற நிபந்​தனை​யுடன், அவருக்கு அக்​.30 வரை இடைக்​கால ஜாமீன் வழங்கி உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

‘தி மயி​லாப்​பூர் இந்து பர்​மனென்ட் ஃபண்ட் லிமிடெட்’ நிதி நிறு​வனத்​தில் முதலீடு செய்த100-க்​கும் மேற்​பட்​டோரிடம் பல நூறு கோடி மோசடி செய்​த​தாக அதன் நிர்வாக இயக்​குநர் தேவ​நாதன் யாதவ் மற்​றும் இயக்​குநர்​கள் என 6 பேரை சென்னை பொருளா​தார குற்​றப்​பிரிவு போலீ​ஸார் கடந்த 2024 ஆகஸ்​டில் கைது செய்து சிறை​யில் அடைத்​தனர்.

கடந்த ஓராண்​டுக்​கும் மேலாக சிறை​யில் உள்ள தேவ​நாதன் யாதவுக்கு ஜாமீன் கோரி, 3-வது முறை​யாக சென்னை உயர் நீதி​மன்றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. நீதிபதி ஜி.ஜெயச்​சந்​திரன் முன்பு இந்த வழக்கு விசா​ரணை ஏற்​கெனவே நடந்​தது. தேவநாதன் யாதவுக்​காக மூத்த வழக்​கறிஞர் எஸ்​டிஎஸ்​.மூர்த்​தி, வழக்​கறிஞர் ஹரி​யும், அரசு தரப்​பில் வழக்​கறிஞர் ராஜ்​திலக்​கும் வாதிட்​டனர். முதலீட்​டாளர்​கள் தரப்​பில் வழக்​கறிஞர்​கள் திரு​மூர்த்​தி, அஷ்​வின்​கு​மார், அருண் சி.மோகன் உள்​ளிட்​டோர் வாதிட்​டனர். வாதங்​களை கேட்ட நீதிபதி ஜெயச்​சந்​திரன், தீர்ப்பை தள்​ளி​வைத்​திருந்​தார்.

இந்​நிலை​யில், நீதிபதி பிறப்​பித்​துள்ள உத்​தர​வில் கூறி​யுள்​ள​தாவது: ‘முதலீட்​டாளர்​களின் முதிர்ச்சி தொகை​யை, ஓராண்​டுக்​குள் தனது சொத்​துகளை விற்று திருப்பி அடைத்து விடு​வேன். மற்ற முதலீடு​கள் முதிர்ச்​சி​யடைந்​ததும் உடனே தந்​து​விடு​வேன்’ என்று மனு​தா​ரர் உத்​தர​வாதம் அளித்​துள்​ளார். தனக்கு ரூ.633 கோடி சொத்​துகள் இருப்​ப​தாக​வும் கூறி​யுள்​ளார். ஆனால், ‘இதில் பெரும்​பாலானவை 3-வது நபர்​களின் பெயரில் உள்​ளன. பல சொத்​துக்​கள் வில்​லங்​கம் உள்​ளவை.

அவற்​றின் வழி​காட்டி மதிப்​பீடு ரூ.36 கோடி’ என்று அரசு தரப்​பில் கூறப்​பட்​டுள்​ளது. தற்​போது வரை முதலீட்​டாளர்​களுக்கு ரூ.300 கோடியை உடனடி​யாக திருப்பி தரவேண்​டும் என்ற நிலை​யில், ஜாமீன் வழங்​கி​னால்​தான், அவர் தனது சொத்​துகளை விற்​று, பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்​கான தொகையை திருப்பி தரமுடி​யும். எனவே, அவருக்கு இடைக்​கால​மாக ஜாமீன் வழங்​கு​கிறேன். நிறுவன இயக்​குநர்​கள் மற்​றும் தனது பெயரில் உள்ள சொத்​துகளை விற்று முதலீட்​டாளர்​களுக்கு சேர வேண்​டிய தொகையை அவர் தரவேண்​டும்.

ஜாமீன் நிபந்​தனை​யாக தனது சொந்​தப் பணம் ரூ.100 கோடியை விசா​ரணை நீதி​மன்​ற​மான டான்ஃபிட் நீதி​மன்​றத்​தில் அக்​.30-க்​குள் டெபாசிட் செய்ய வேண்​டும். ரூ.10 லட்​சம் மதிப்​பில் இருநபர் ஜாமீன் உத்​தர​வாதம் அளித்​து, கீழமை நீதி​மன்​றத்​தில் அவர் இடைக்​கால ஜாமீன் பெறலாம். பாஸ்​போர்ட்டை நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்ய வேண்​டும். நீதி​மன்ற அனு​மதி பெறாமல் சொத்​துகளை விற்​கவோ, உரிமம் மாற்​றவோ கூடாது. அக்​.30 வரை ஒவ்​வொரு திங்​கள்​கிழமை​யும் விசா​ரணை நீதி​மன்​றத்​தில் அவர் ஆஜராக வேண்​டும்.

இந்த நிபந்​தனை​களை மீறி​னால், விசா​ரணை நீதி​மன்​றம் சட்​டரீ​தி​யாக தகுந்த உத்​தரவை பிறப்​பிக்​கலாம். அக்​.31-ம் தேதி அவர் விசா​ரணை நீதி​மன்​றத்​தில் சரணடைந்து சிறைக்கு செல்ல வேண்​டும். தனது சொத்​துகளை விற்று முதலீட்​டாளர்​களுக்கு தொகை வழங்​கு​வேன் என்று அவர் அளித்த உத்​தர​வாதத்தை உறுதி செய்​யும் வகை​யில் அவருக்கு இடைக்​கால ஜாமீன் வழங்​கப்​படு​வ​தால், அதற்​குள் சொத்​துகளை விற்க தேவை​யான நடவடிக்​கை​யும், அதற்​கான திட்​டத்​தை​யும் சிறப்பு நீதி​மன்​றத்​தில்​ தாக்​கல்​ செய்​ய வேண்​டும்​. இவ்​வாறு நீதிப​தி உத்​தர​விட்​டுள்​ளார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.