இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி. கிட்டத்தட்ட 17 ஆண்டுகளை இந்திய அணியுடன் நிறைவு செய்திருக்கிறார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றன. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இவரது பேட்டிங்கிற்கு பலரும் ரசிகராக உள்ளனர். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சச்சின் டெண்டுல்கருக்கு பின்னர் பல சாதனைகளை இவர் படைத்துள்ளார். ஏன் சச்சினின் சாதனைகளையே இவர் முறியடித்திருக்கிறார்.
Add Zee News as a Preferred Source
மொத்தமாக 82 சதங்களை விளாசி இருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களை மட்டுமே அடித்திருக்கிறார். அதனை மிஞ்சி 51 சதங்களுடன் உள்ளார் விராட் கோலி. அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 30, ஒருநாள் போட்டிகளில் 51 மற்றும் டி20 போட்டிகளில் 1 சதம் என சர்வதேச அரங்கில் 82 சதங்களை பதிவு செய்து சாதனை பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இப்படி பல சாதனைகளை படைத்த வீரர் தற்போது மொத்தமாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் தருணத்தில் உள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது. அதோடு தான் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்தார். பின்னர் இந்த ஆண்டு மே மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை தெரிவித்தார்.
தற்போது மிஞ்சி இருப்பது ஒருநாள் கிரிக்கெட் மட்டும்தான். அதில் அவர் 2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை விளையாட விரும்புவதாக தெரிகிறது. அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதால், இந்த ஆண்டு தொடக்கத்திற்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் அவர் விளையாடாத நிலையில், அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவர் விளையாட இருக்கிறார்.
இந்த சூழலில் கடந்த சில காலமாக விராட் கோலியின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்த நிலையில், பிரபல இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப், விராட் கோலியின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தால் அதை தான் ஏற்க போவதில்லை என கூறி பரபரப்பை எற்படுத்தி இருக்கிறார்.இவரது பதில் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக அவர் பேசுகையில், விராட் கோலியின் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்க நான் விரும்பவில்லை. ஏனெனில் அனைத்து மக்களுக்கும் குழந்தைகளுக்கும் அவர் ஏற்கனவே ஹீரோவாக உள்ளார். வாழ்க்கை வரலாறு படத்தை இயக்க வேண்டும் என்றால் நான் வேறு ஒருவரைதான் தேர்வு செய்வேன். விராட் கோலி மிகவும் அழகானவர் சிறந்த மனிதர் என அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார்.
About the Author
R Balaji