மீண்டும் இந்திய அணியில் அஸ்வின்… இப்போ புதிய அவதாரம் – யாருமே எதிர்பார்க்கல!

Ravichandran Ashwin: ரவிசந்திரன் அஸ்வின் கடந்தாண்டு இறுதியில் சர்வேதச போட்டிகளில் இருந்தும், கடந்த மாதம் ஐபிஎல் தொடரிலும் இருந்தும் ஓய்வை அறிவித்தார். இந்நிலையில் தற்போது ஹாங் காங் சிக்சஸ் 2025 தொடரில் இந்திய அணிக்காக விளையாட உள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.

Add Zee News as a Preferred Source

Ashwin: 2008 முதல் 2025 வரை 

ரவிசந்திரன் அஸ்வின் 2009ஆம் ஆண்டில் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து, 2010ஆம் ஆண்டில் அவர் இந்திய அணியின் ஓடிஐ மற்றும் டி20ஐ போட்டிகளில் அறிமுகமானார். 2011ஆம் ஆண்டில் டெஸ்டில் அறிமுகமானார். டி20ஐ போட்டிகளில் 2022இல், ஓடிஐ போட்டிகளில் 2023இல் கடைசியாக விளையாடியிருந்தார். 2024இல் கடைசி டெஸ்ட் மற்றும் சர்வதேச போட்டியை விளையாடினார். 

சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்ற பின்னர் அஸ்வின் ஐபிஎல் தொடரிலும், டிஎன்பிஎல் தொடரிலும் தொடர்ந்து விளையாடினார். டிஎன்பிஎல் தொடரில் இவர் தலைமையில் கடந்தாண்டு கோப்பையை வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, இந்த முறை இறுதிப்போட்டி வரை சென்றது. ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி இவரை மெகா ஏலத்தில் ரூ.9.75 கோடிக்கு எடுத்தது. தொடர்ந்து, 2025 சீசனில் சிஎஸ்கேவில் விளையாடிய அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவர் டெஸ்டில் 537 விக்கெட்டுகளையும், ஓடிஐ-ல் 156 விக்கெட்டுகளையும், டி20ஐ-ல் 72 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் 187 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். முதல் தர போட்டிகளில் 779 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளார்.

Ashwin: ஹாங் காங் சிக்சஸ் தொடரில் அஸ்வின்

இவர் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்தாலும் டிஎன்பிஎல் மற்றும் பிற வெளிநாட்டு தொடர்களில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்திருந்தார். இதனால் அவர் ஆஸ்திரேலியாவின் BBL லீக், ஐக்கிய அரபு அமீரகத்தின் ILT20, இங்கிலாந்தின் The Hundred உள்ளிட்ட தொடர்களில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்தச் சூழலில் அவர் Hong Kong Sixes 2025 தொடரில் இந்திய அணிக்காக விளையாட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் அஸ்வின் இந்திய அணி ஜெர்ஸியில் பார்க்கலாம் என ரசிகர்கள் குதூகலத்தில் உள்ளனர்.

Legendary Indian spinner Ravichandran Ashwin ( @ashwinravi99 ) is set to light up Hong Kong!

He’ll be a key part of Team India at the @hongkongsixes 2025, happening from 7–9 November.

Fans will get the rare chance to watch Ashwin’s wizardry in the fastest, most entertaining… pic.twitter.com/erpz6BQDnl

— Cricket Hong Kong, China (@CricketHK) September 18, 2025

Ashwin: ஹாங் காங் சிக்சஸ் தொடரின் விதிகள்

Hong Kong Sixes தொடர் என்பது ஆறு ஓவர்கள் மட்டும் நடைபெறும் தொடராகும். ஹாங் காங்க் கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படுகிறது. ஒரு இன்னிங்ஸிற்கு ஆறு ஓவர்கள் மட்டுமே வீசப்படும். ஒரு அணியில் 6 வீரர்கள் மட்டுமே விளையாடுவார்கள். மொத்தம் 12 அணிகள் விளையாடும். விக்கெட் கீப்பரை தவிர மற்ற 5 பேரும் பந்துவீச வேண்டும், ஒருவர் ஒரு ஓவரையே வீச வேண்டும். ஒரு ஓவருக்கு 6 பந்துகள் வீசப்படும், ஆனால் இறுதிப்போட்டியில் மட்டும் ஒரு ஓவருக்கு 8 பந்துகள் வீசப்படும். 

5 ஓவர்கள் முடிவதற்குள் 5 வீரர்கள் ஆட்டமிழந்துவிட்டால், மீதம் இருக்கும் வீரர் மட்டும் பேட்டிங் செய்யலாம். ரன்னராக கடைசியாக ஆட்டமிழந்த வீரர் இருப்பார். ஆறு விக்கெட் போனால் இன்னிங்ஸ் முடிந்துவிடும். ஒரு பேட்டர் 50 ரன்களை அடித்துவிட்டால் அவர் ரிட்டயர் நாட் அவுட்டாக அறிவிக்கப்படுவார். அதாவது அதற்கடுத்த அனைவரும் ஆட்டமிழந்தாலோ அரைசதம் தாண்டினாலோ முதலில் 50 ரன்களை அடித்த வீரர் களமிறங்கலாம். நோ-பால் வீசினாலும் Free Hit கிடையாது. வித்தியாசமான விதிகளை கொண்ட இந்த தொடரில் 2005ஆம் ஆண்டு இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது.

Ashwin: ஹாங் காங் சிக்சஸ் எப்போது?

பல ஆண்டுகளுக்கு கடந்தாண்டு இந்த தொடர் மீண்டும் தொடங்கப்பட்டது. தற்போது வரும் நவம்பர் 7 – 9 தேதிகளில் Hong Kong Sixes திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொடரில்தான் தற்போது அஸ்வின் இந்திய அணிக்காக விளையாட உள்ளார். இந்த தொடரில் ஆல்-ரவுண்டர்களின் தேவை அதிகம் என்பதால் அஸ்வின் இந்திய அணியில் விளையாட இருக்கிறார். பந்துவீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் அவர் கைக்கொடுக்க வேண்டும். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.