3வது டி20 போட்டி: அயர்லாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு

டப்ளின்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி மழை பெய்ததன் காரணமாக டாஸ் கூட போடாமல் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக 2 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி இன்று நடக்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது . அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜேக்கப் பெத்தேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.