ஆசிய கோப்பை தொடர் செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது சூப்பர் 4 சுற்றுக்கு நடைபெற்று வருகிறது. இந்த சுற்றின் முதல் போட்டியில் இலங்கை அணியும் வங்கதேசம் அணியும் மோதியது. அதில் வங்கதேசம் அணி வென்றது. இரண்டாவது போட்டி நேற்று செப்டம்பர் 21-ஆம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி எதிர்கொண்ட நிலையில், இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இத்தொடரில் பாகிஸ்தான் அணி இந்தியாவை எதிர்கொண்ட இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவியது.
Add Zee News as a Preferred Source
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 171 ரன்கள் அடுத்தது. இதையடுத்து 18.5 ஓவர்களிலேயே இந்திய அணி 175 ரன்கள் வெற்றி பெற்றது. முதல் 10 ஓவர்களில் 90 ரன்களுக்கு மேல் அடித்த பாகிஸ்தான் அணியை, இந்திய பவுலர்கள் 200 ரன்கள் தொட விடாமல் மடக்கி பிடித்தனர். குல்தீப் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலா 1 விக்கெட்டையும், சிவம் துபே 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். பேட்டிங்கில் அபிஷேக் சர்மா 74, சுப்மன் கில் 47, திலக் வர்மா 30* ரன்களுடன் முன்னிலை வகித்தனர்.
வாசிம் அக்ரம் வருத்தம்
இந்த வெற்றி இந்தியாவை பாகிஸ்தானுக்கு எதிரான தொடர்ச்சியான வெற்றிகளின் எண்ணிக்கையில் மேலும் முன்னேற்றியது. கடந்த 5 ஆண்டுகளில் பாகிஸ்தான் அணியை இந்தியா 7 போட்டிகளில் தொடர்ச்சியாக வீழ்த்தியுள்ளது. இந்த நிலையில், முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் வேதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, நான் எனது இதயத்தில் இருந்து பேசுகிறேன். தற்போதைய பாகிஸ்தான் அணியை பார்ப்பது வேதனையாக உள்ளது. ஒரு போட்டியில் தோற்பதும் வெல்வதும் விளையாட்டின் ஒரு அங்கம் என முன்னாள் வீரராக என்னால் புரிந்துக்கொள்ள முடிகிறது. ஆனால் கடந்த 4, 5 ஆண்டுகளாக இந்திய அணி பாகிஸ்தானை மிஞ்சி அனைத்து துறைகளிலும் சிறப்பாக விளையாடுகிறது. இந்திய அணிக்கு எதிராக நாம் ஓரிரு போட்டிகளில் மட்டுமே வென்றோம். உண்மையில் இந்திய அணி சிறப்பாக விளையாடுகிறது. முதல் 10 ஓவரில் 91 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் அணி 200 ரன்களை தொடவில்லை என்பது அதிர்ச்சியளிக்கும் விதமாக இருந்தது என மிகுந்த வேதனையுடன் தெரிவித்தார்.
அடுத்த போட்டிகள்
ஆசிய கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் இதுவரை இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதையடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரண்டுமே வங்கதேசம், இலங்கை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை இத்தொடரின் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
About the Author
R Balaji