சென்னை: சிவகங்கை அரசு மாணவிகள் விடுதியில், அங்கு தங்கியிருந்து படித்துவரும் மாணவிகளிடம் மதமாற்றம் செய்யப்படும் படத்தை வெளியிட்டு, மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு அரசு மீது குற்றம் சாட்டி உள்ளார். தமிழ்நாடு அரசு சமீபத்தில், அரசு மாணவ மாணவிகளின் விடுதிகளின் பெயரை, சமூக நல விடுதி என பெயர் மாற்றியது. இந்த நிலையில், சிவகங்கை பகுதியில் செயல்பட்டு வரும் மாணவிகள் விடுதியில், மதமாற்றம் செய்யப்படும் வீடியோவை நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி […]
