இபிஎப் நிறுவனத்தில் நடப்பாண்டு ஜூலையில் தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் அதிக உறுப்பினர் சேர்க்கை

சென்னை: தொழிலா​ளர் வருங்​கால வைப்பு நிதி நிறு​வனத்​தில் (இபிஎப்ஓ) நடப்​பாண்டு ஜூலை மாதத்​தில் தமிழகம் உள்​ளிட்ட 6 மாநிலங்​களில் அதிக உறுப்​பினர்​கள் சேர்க்​கப்​பட்​டுள்​ளனர்.

தொழிலா​ளர் வருங்​கால வைப்பு நிதி நிறு​வனம் சார்​பில், 2025-ம் ஆண்டு ஜூலை மாதத்​துக்​கான தற்​காலிக சம்​பளப் பட்​டியல் தரவு​கள் வெளி​யிடப்​பட்​டுள்​ளன. இதில் 21.04 லட்​சம் உறுப்​பினர்​கள் இணைக்​கப்​பட்​டுள்​ளனர். 2024-ம் ஆண்டு தரவு​களு​டன் ஒப்​பிடும்​போது, நிகர சம்பளப் பட்​டியல் உறுப்​பினர்​கள் இணைப்பு 5.55 சதவீதம் உயர்ந்​துள்​ளது.

தொழிலா​ளர் வருங்​கால வைப்​புநிதி நிறு​வனத்​தின் தொடர் முயற்​சிகள், வலு​வான கூடு​தல் வேலை வாய்ப்​பு​கள் மற்​றும் பணி​யாளர் நலன் குறித்த விழிப்​புணர்வை எடுத்​துக்​காட்​டு​வ​தாக இது அமைந்​துள்​ளது. 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் வெளி​யிடப்​பட்​டுள்ள சம்​பளப் பட்​டியலில் உள்ள தரவு​களின் முக்​கிய சிறப்​பம்​சங்​கள் வரு​மாறு: நடப்பு ஆண்டு ஜூலை மாதத்​தில் தொழிலா​ளர் வருங்​கால வைப்​புநிதி நிறு​வனம் சார்​பில் 9.79 லட்​சம் புதிய சந்​தா​தா​ரர்​கள் சேர்க்​கப்​பட்​டுள்​ளனர். சம்​பளப் பட்​டியலில் 18 முதல் 25 வயதுக்கு உட்​பட்​ட​வர்​கள் முன்​னிலை​யில் உள்​ளனர். இந்​தப் பிரி​வில் 5.98 லட்​சம் புதிய சந்​தா​தா​ரர்​கள் இணைக்​கப்​பட்​டுள்​ளனர். இது 2025 ஜூலை​யில் சேர்க்​கப்​பட்ட புதிய சந்​தா​தா​ரர்​கள் எண்​ணிக்​கை​யில் 61.06 சதவீதம் ஆகும்.

சம்பள பகுப்​பாய்வு பட்​டியலில் முன்​னிலை​யில் உள்ள 5 மாநிலங்​கள் மற்​றும் யூனியன் பிரதேசங்​கள் 60.85 சதவீத புதிய உறுப்​பினர் சேர்க்கை பங்​களிப்​பை கொண்​டுள்​ளன. இதில் மகா​ராஷ்டிரா மாநிலம் 20.47 சதவீதம் புதிய உறுப்​பினர் சேர்க்கை பங்​களிப்பை பெற்று முன்​னணி​யில் உள்​ளது. கர்​நாட​கா, தமிழகம், குஜ​ராத், தெலங்​கா​னா, உத்​தரப் பிரதேசம், ஹரி​யானா ஆகிய மாநிலங்​களில் 5 சதவீதத்​துக்​கும் அதிக உறுப்​பினர்​கள்​ சேர்க்கப்பட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.