உ.பி.யில் ஜாதி கூட்டங்களுக்கு தடை: அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவு அமல்

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் எட்​டா​வா​வில் மது​பானக் கடத்​தல் தொடர்​பான குற்​ற​வியல் நடவடிக்​கைகளை ரத்து செய்ய கோரி பிர​வீன் சேத்ரி என்​பவர் மனு தாக்​கல் செய்​தார். அதில், “ஜா​தியை கொண்​டாடு​வது தேச விரோத​மானது.

அரசி​யலமைப்பை மதிப்​பது தேசபக்​தி​யின் மிக உயர்ந்த வெளிப்​பாடு” என்று கூறி​யிருந்​தார். அந்த மனுவை உயர் நீதி​மன்ற நீதிபதி வினோத் திவாகர் தள்​ளு​படி செய்​தார். எனினும், அவர் வெளி​யிட்ட உத்​தர​வில், “சமூகத்​தில் ஜாதி​யைப் பெரு​மைப்​படுத்​து​வதை நிறுத்த வேண்​டும்.

உ.பி.​யின் அரசு ஆவணங்​கள், வாக​னங்​கள் மற்​றும் பொது இடங்​களில் இருந்து ஜாதி பெயர்​கள், சின்​னங்​களை அகற்ற வேண்​டும். வரும் 2047-ம் ஆண்​டுக்​குள் வளர்ந்த நாடாக இந்​தியா மாற வேண்​டுமென்​றால், ஜாதி அமைப்பு ஒழிக்​கப்பட வேண்​டும்’’ என்று தெரி​வித்​தார்.

அதன்​படி, உ.பி. அரசு ஜாதி அடிப்​படையி​லான பொதுக் கூட்​டங்​கள், பேரணி​கள் மற்​றும் நிகழ்ச்​சிகளைத் தடை செய்​துள்​ளது. இதுகுறித்து உ.பி. தலைமை செயலர் தீபக் குமார் வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சமூக ஊடகங்​கள் மற்​றும் இணை​யத்​தில் ஜாதியை கொண்​டாடு​வது அல்​லது வெறுப்பை பரப்​பும் உள்​ளடக்​கத்​துக்கு எதி​ராக ஐடி சட்​டத்​தின் கீழ் நடவடிக்கை எடுக்​கப்​படும்.

காவல் நிலை​யங்​களில் முதல் தகவல் அறிக்​கைகள் (எப்​ஐஆர்), கைது குறிப்​பு​கள் மற்​றும் குற்​றப்​பத்​திரி​கைகள் போன்ற ஆவணங்​களில் இனிமேல் ஜாதி இடம்​பெறாது. குற்​றம் சாட்​டப்​பட்​ட​வர்​களை அடை​யாளம் காண தந்​தை​யின் பெயருடன் தாயின் பெயரும் சேர்க்​கப்​படும்.

தேசிய குற்​றப் பதிவு ஆவண தளத்​தில் (என்​சிஆர்​பி) குற்ற கண்​காணிப்பு வலை​யமைப்பு மற்​றும் அமைப்​பில் (சிசிடிஎன்​எஸ்) உள்ள ஜாதி தொடர்​பான இடம் காலி​யாக விடப்​படும். அனைத்து வகை வாக​னங்​களில் ஜாதியை குறிப்​பிடு​வதற்கு தடை விதிக்​கப்​படு​கிறது.

சமூக ஊடகங்​களி​லும் ஜாதி அடிப்​படையி​லான பதிவு​கள், பிரச்​சா​ரங்​கள், விமர்​சனங்​கள் தடை செய்​யப்​படும். பட்​டியலினத்​தவருக்​கான சட்​டம் போன்ற வழக்​கு​களில் ஜாதியை குறிப்​பிடு​வது அவசி​யம் என்​ப​தால், இந்த உத்​தர​வில் இருந்து அவர்​களுக்கு மட்​டும் விலக்கு அளிக்​கப்​படு​கிறது. இவ்​வாறு அந்​த அறி​விப்​பில்​ கூறப்​பட்​டுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.