கோவை, நீலகிரியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்​கக் கடலில் உரு​வாக​வுள்ள காற்​றழுத்​த தாழ்​வுப் பகு​தி​யால் நாளை (செப். 25) கனமழைக்கு வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

இது தொடர்​பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: வடகிழக்கு வங்​கக்​கடல் மற்​றும் அதையொட்​டிய பகு​தி​களில் நில​விய காற்​றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை மேற்கு வங்​கம் மற்​றும் அதையொட்​டிய வடக்கு ஒடிசா – வடமேற்கு வங்​கக்​கடல் பகு​தி​களில் நில​வியது. இது இன்று வலுகுறையக்​கூடும்.

தென்​னிந்​தி​ய பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நில​வு​கிறது. நாளை மத்​திய கிழக்கு மற்​றும் அதையொட்​டிய வடக்கு வங்​கக் கடல் பகு​தி​களில் காற்​றழுத்த தாழ்வு பகுதி உரு​வாகக்​கூடும். இது மேற்கு திசை​யில் நகர்ந்து வரும் 26-ம் தேதி தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்​திர கடலோரப் பகு​தி​களுக்கு அப்​பால் உள்ள வடமேற்கு மற்​றும் அதையொட்​டிய மத்​திய மேற்கு வங்​கக்​கடல் பகு​தி​களில் காற்​றழுத்த தாழ்வு மண்​டல​மாக வலுப்​பெற்​று, தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்​திர கடலோரப் பகு​தி​களில் வரும் 27-ம் தேதி கரையை கடக்​கக்​கூடும்.

இவற்​றின் தாக்​கத்​தால் தமிழகத்​தின் ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி மற்​றும் காரைக்​கால் பகு​தி​களி​லும் இன்று லேசானது முதல் மித​மான மழை பெய்​யக் கூடும். கோவை மாவட்​டத்​தின் மலைப் பகு​தி​கள் மற்​றும் நீல​கிரி மாவட்​டத்​தில் ஓரிரு இடங்​களில் நாளை கனமழை பெய்​ய​வாய்ப்​புள்​ளது. சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் சில பகு​தி​களில் லேசான மழை பெய்ய வாய்ப்​புள்​ளது. அதி​கபட்ச வெப்​பநிலை 95 டிகிரி, குறைந்​த​பட்ச வெப்​பநிலை 80.6 டிகிரி பாரன்​ஹீட் அளவில் இருக்​கும்.

தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்​திர கடலோரப் பகு​தி​களுக்கு அப்​பால் உள்ள வடமேற்கு மற்​றும் அதையொட்​டிய மத்​திய மேற்கு வங்​கக்​கடல் பகு​தி​களில் உள்ள மீனவர்​கள் கரைக்கு திரும்​பு​மாறு அறி​வுறுத்​தப்​படு​கிறார்​கள். தமிழகத்​தில் நேற்று காலை 8.30 மணி வரையி​லான கடந்த 24 மணி நேரத்​தில் பதி​வான மழை அளவு​களின்​படி அதி​கபட்​ச​மாக விழுப்​புரம், ராணிப்​பேட்டை மாவட்​டம் அரக்​கோணத்​தில் 5 செ.மீ. மழை பெய்​துள்​ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.