40 வயதில் இந்திய அணியின் கேப்டனான தினேஷ் கார்த்திக்! பிசிசிஐ அறிவிப்பு!

Dinesh Karthi: இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரும், முன்னாள் விக்கெட் கீப்பருமான தினேஷ் கார்த்திக் அனைத்து வித கிரிக்கெட்டிலும் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார். ஐபிஎல்லில் மட்டும் விளையாடி வந்த அவர் கடந்த சீசனில் பயிற்சியாளராக அறிமுகமானார். இந்நிலையில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, மீண்டும் இந்திய அணிக்கு கேப்டனாக திரும்பி உள்ளார். இந்த ஆண்டு நவம்பர் மாதம் 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெறவுள்ள ஹாங்காங் சிக்ஸஸ் 2025 தொடரில், இந்திய அணியை அவர் வழிநடத்த உள்ளார் தினேஷ் கார்த்திக். இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Add Zee News as a Preferred Source

ஓய்வுக்கு பின் அதிரடி திருப்பம்

2024ம் ஆண்டு அனைத்து விதமான இந்திய கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்த தினேஷ் கார்த்திக், தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பேட்டிங் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். அவர் பொறுப்பேற்ற முதல் சீசனிலேயே ஆர்சிபி அணி கோப்பையை வென்றுள்ளது. மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற SA20 தொடரில் பார்ல் ராயல்ஸ் அணிக்காகவும் விளையாடினார். இந்நிலையில் மீண்டும் இந்திய ஜெர்சியில் அதுவும் கேப்டனாக அவர் களமிறங்குவது இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ஹாங்காங் கிரிக்கெட் பெருமிதம்

தினேஷ் கார்த்திக்கின் நியமனம் குறித்து, ஹாங்காங் கிரிக்கெட் வாரியம் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “2025 ஹாங்காங் சிக்ஸஸ் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக்கை வரவேற்பதில் பெருமை கொள்கிறோம். அவரது நீண்ட கால சர்வதேச அனுபவம், கூர்மையான தலைமை பண்புகள் மற்றும் அதிரடியான பேட்டிங் இந்த தொடருக்கு உத்வேகத்தையும், தீவிரத்தையும் கொண்டு வரும்,” என்று பதிவிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த தினேஷ் கார்த்திக், “இவ்வளவு பெரிய வரலாறு மற்றும் உலகளாவிய அங்கீகாரம் கொண்ட ஒரு தொடரில், இந்திய அணியை வழிநடத்துவது எனக்கு கிடைத்த முழுமையான மரியாதை. நம்பமுடியாத சாதனைகளை படைத்த வீரர்களை வழிநடத்த ஆவலுடன் காத்திருக்கிறேன். நாங்கள் அனைவரும் இணைந்து, ரசிகர்களுக்கு அச்சமற்ற மற்றும் பொழுதுபோக்கு கிரிக்கெட்டை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளோம்,” என்றார்.

We are proud to welcome Dinesh Karthik as the Captain of Team India for the Hong Kong Sixes 2025.

With his vast international experience, sharp leadership skills, and explosive batting, Dinesh will bring both inspiration and intensity to the tournament. His appointment reflects… pic.twitter.com/XlfTnOPsM3

— Cricket Hong Kong, China (@CricketHK) September 23, 2025

அணியில் அஸ்வினும் இணைப்பு

தினேஷ் கார்த்திக்குடன், சக தமிழக வீரரும் சுழற்பந்து வீச்சு ஜாம்பவானுமான ரவிச்சந்திரன் அஸ்வினும் இந்த தொடரில் விளையாட உள்ளார். ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, அஸ்வின் பங்கேற்கும் முதல் தொடர் இதுவாகும். மொத்தம் ஆறு வீரர்கள், ஆறு ஓவர்கள் என விறுவிறுப்பாக நடைபெறும் இந்த ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில், இந்திய அணி இதுவரை 2005ல் ஒருமுறை மட்டுமே கோப்பையை வென்றுள்ளது. கடந்த 2024ம் ஆண்டு, ராபின் உத்தப்பா தலைமையில் களமிறங்கிய இந்திய அணி, அனைத்து லீக் போட்டிகளிலும் தோல்வியடைந்து, முதல் சுற்றிலேயே வெளியேறியது. இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் மற்றும் அஸ்வின் போன்ற அனுபவமிக்க வீரர்களின் வருகை, இந்த முறை இந்திய அணி கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கையை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.