துபாய்,
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 2-ந்தேதி ஆமதாபாத்தில் தொடங்குகிறது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கு உட்பட்டது என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் தலைமையிலான அந்த அணியில் முன்னணி வீரரான கருண் நாயர் இடம்பெறவில்லை.
இந்த நிலையில் , இந்திய அணியில் இருந்து கருண் நாயர் நீக்கப்பட்டது ஏன் என்பது தொடர்பாக தேர்வு குழு தலைவர் அகர்கர் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
கருண் நாயரிடமிருந்து நாங்கள் இன்னும் அதிகமாக எதிர்பார்த்தோம். அவர் இங்கிலாந்து தொடரில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார், ஆனால் நாம் ஒரு இன்னிங்ஸைப் பற்றி மட்டுமே பேசினோம். அது அப்படித்தான் முடிந்தது. எல்லோருக்கும் 20 டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு வழங்கவேண்டும் என்று தான் நாங்களும் விரும்புகிறோம். துரதிர்ஷ்டவசமாக, அது அப்படி நடப்பதில்லை. என தெரிவித்தார் .
இந்திய அணி விவரம்:
சுப்மன் கில் (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், படிக்கல், துருவ் ஜூரெல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் படேல், நிதிஷ் ரெட்டி, ஜெகதீசன், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ்