விடா எலக்ட்ரிக் உரிமையாளர்களுக்கு வாரண்டி மற்றும் சிறப்பு சலுகைகள் | Automobile Tamilan

ஹீரோ மோட்டோகார்ப்பின் விடா எலக்ட்ரிக் பிராண்டில் உள்ள மின்சார ஸ்கூட்டர்களுக்கு நீட்டிக்கப்பட்ட வாரண்டி, சிறப்பு பைபேக் சலுகைகள் மற்றும் சிரமத்தை எதிர்கொள்ளாத வலுவான 3600க்கு மேற்பட்ட விரைவு சார்ஜிங் நெட்வொர்க் அனுகுவதற்கு ஏற்ற திட்டங்களை செயற்படுத்த துவங்கியுள்ளது.

புதிதாக விடா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், விரிவான நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் ஆனது 11 முக்கியமான பாகங்கள் உட்பட ஐந்து ஆண்டுகள் அல்லது 75,000 கிலோமீட்டர் வரை உள்ளடக்கியது, அதே நேரத்தில் பிரத்யேக பேட்டரி உத்தரவாதமானது ஐந்து ஆண்டுகள் அல்லது 60,000 கிலோமீட்டர் வரை நீட்டிக்கப்படுகிறது.  ஆனால் பேட்டரிக்கான வாரண்டியில் புரோ மற்றும் லைட் வேரியண்டுகளுக்கு 50,000 கிலோமீட்டர் மட்டும் வழங்கப்படுகின்றது.

மூன்று வருடத்திற்கு பிறகு விடா மின்சார ஸ்கூட்டரை மாற்றிவிட்டு புதிய விடா அல்லது விற்பனை செய்ய விரும்பினால் அசல் எக்ஸ்-ஷோரூம் விலையில் 67.5% வரை உத்தரவாதம் அளிக்கிறது, VIDAவின் இந்த உறுதியான திரும்ப வாங்கும் திட்டத்தின் மூலம் வாகனத்தை விற்பனை செய்வது மிக எளிதாகுவதனால் வாடிக்கையாளர்கள் விற்பனை செய்ய நினைத்தால் சிரமமில்லாத விற்பனையை மேற்கொள்ளலாம்.

அடுத்து, 12 மாதங்களுக்கு ரூ.1,499 கட்டணத்தில் அறிவிக்கப்பட்டுள்ள Vida Edge மூலமாக நிறுவனத்தின் நெட்வொர்க் முழுவதும் வரம்பற்ற வேகமான சார்ஜிங் மற்றும் மொபைல் பயன்பாடுகள் மூலம் 40க்கும் மேற்பட்ட இணைக்கப்பட்ட அம்சங்களை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் பேட்டரி நிலையை கண்காணிக்கலாம், சார்ஜிங் நிலையங்களைக் கண்டறியவும், OTA மூலம் அப்டேட் பெறலாம்.

பேட்டரி-ஆஸ்-ஏ-சர்வீஸ் (BaaS) திட்டத்தில் வாங்குவாருக்கு விடா எட்ஜ் இலவசமாக குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹீரோ விடா விஎக்ஸ்2 அறிமுகத்திற்கு பின்னர் விடா விற்பனை மாதந்தோறும் 10,000 யூனிட்டுகளுக்கு கூடுதலான சில்லறை விற்பனையை பதிவு செய்து வருவதுடன் நாடு முழுவதும் 600க்கு மேற்பட்ட டீலர்களிடம் கிடைக்க துவங்கியுள்ளது.

Related Motor News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.