India vs Sri Lanka Free Live Score: ஆசிய கோப்பை 2025 தொடர் அதன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்தியா – பாகிஸ்தான் அணிகள் ஆசிய கோப்பை வரலாற்றில் முதல்முறையாக இறுதிப்போட்டியில் மோத இருக்கின்றன. அதாவது ஓடிஐ மற்றும் டி20ஐ ஆசிய கோப்பையில் இதுவரை ஒருமுறை கூட இந்தியா – பாகிஸ்தான் இறுதிப்போட்டியில் மோதியதில்லை.
Add Zee News as a Preferred Source
வரும் செப்டம்பர் 28ஆம் தேதி (ஞாயிறு) அன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியும், சல்மான் அல் ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.
Asia Cup 2025: பைனலில் இந்தியா – பாகிஸ்தான்
நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இதற்கு முன் குரூப் சுற்றில் ஏ பிரிவு போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்திலும், சூப்பர் 4 சுற்று போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வீழ்த்தியிருக்கிறது. அந்த வகையில், தொடர்ந்து மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையாக கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியா – பாகிஸ்தான் போட்டியை காண இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
IND vs SL Free Live: சம்பிரதாய போட்டி
இந்தியா – பாகிஸ்தான் மோதும் பைனல் எனும் ஹை-வோல்டேஜ் போட்டி இருக்கும் அதே வேளையில், இன்று சூப்பர் 4 சுற்றில் கடைசியாக சம்பிரதாய போட்டி ஒன்றும் நடைபெற இருக்கிறது. துபாய் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோதிக் கொள்கின்றன. இலங்கை அணி குரூப் சுற்றில் தோல்வியே சந்திக்காமல் இருந்த நிலையில், சூப்பர் 4 சுற்றில் அடுத்தடுத்து வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானிடம் தோற்று தொடரை விட்டு வெளியேறிவிட்டது.
IND vs SL Free Live: பதிரானா விளையாடுவாரா?
தற்போது ஆறுதல் வெற்றிக்காக சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணி காத்திருக்கிறது எனலாம். இலங்கை அணி பேட்டிங்கில் ஓரளவு பலமாக இருந்தாலும் பந்துவீச்சில் இன்னும் முன்னேற்றம் காண வேண்டியுள்ளது. இருப்பினும் இன்று அவர்களின் பிளேயிங் லெவனில் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்க இயலாது. நுவான் துஷாராவுக்கு பதில் பதிரானா விளையாடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கடந்த போட்டியின்போது பதிரானாவுக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்று உடற்தகுதியுடன் இருந்தால் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கலாம்.
IND vs SL Free Live: இந்திய அணியில் என்ன மாற்றம் வரும்?
இந்திய அணியை பொருத்தவரை இது சம்பிரதாயமான போட்டி என்பதால் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம். பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்பட்டு அர்ஷ்தீப் சிங் மீண்டும் உள்ளே வரலாம். அக்சர் பட்டேலுக்கு பதில் ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம். சஞ்சு சாம்சனுக்கு ஓய்வளிக்கப்பட்டு ஜித்தேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். அக்சர் பட்டேல் அணியில் இருக்க, குல்தீப் யாதவுக்கு ஓய்வு வழங்கப்பட்டு ஹர்ஷித் ராணா மீண்டும் வரலாம்.
IND vs SL Free Live: பிளேயிங் லெவன் கணிப்பு
இந்திய அணி: சுப்மான் கில், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங்.
இலங்கை அணி: பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ் (விக்கெட்), குசல் பெரேரா, சரித் அசலங்கா (கேப்டன்), தசுன் ஷனக, கமிந்து மெண்டிஸ், சாமிக்க கருணாரத்ன, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷனா, துஷ்மந்த சமீரா, மதீஷா பதிரானா.
IND vs SL Free Live: நேரலையில் பார்ப்பது எப்படி?
இந்தியா – இலங்கை அணிகள் மோதும் சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும், இரவு 7.30 மணிக்கு டாஸ் வீசப்படும். டாஸ் வீசிய பின்னரே இரு அணிகளின் அதிகாரப்பூர்வ பிளேயிங் லெவன் தெரியவரும். இப்போட்டியை தொலைக்காட்சியில் நீங்கள் Sony Sports Network சேனல்கள் வாயிலாகவும், மொபைலில் SonyLiv தளத்தின் மூலமும் பார்க்கலாம். ஆனால் நேரலையை பார்க்க சந்தா செலுத்த வேண்டிவரும்.
IND vs SL Free Live: இலவச லைவ் ஸ்கோர் அப்டேட்
இந்தச் சூழலில், கிரிக்கெட் ரசிகர்களுக்கு முழுமையாக கிரிக்கெட் அனுபவத்தை அளிக்க ஜீ தமிழ் நியூஸ் ஊடகம் புதிய முன்னெடுப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளது. இன்றைய இந்தியா – இலங்கை போட்டியின் லைவ் ஸ்கோர் கார்டு மற்றும் தமிழ் வர்ணனையில் இலவசமாக பார்க்கலாம். அதாவது, ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்தின் யூ-ட்யூப் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் இன்றைய போட்டியின் லைவ் ஸ்கோர் கார்டு நேரலையாக ஒளிபரப்பாகும், அதேநேரத்தில் பின்னணியில் தமிழ் வர்ணனையும் இருக்கும்.
IND vs SL Free Live: போட்டி குறித்த அனைத்து விவரங்களையும்…
லைவ் ஸ்கோர் கார்டு மூலம் நீங்கள் போட்டியின் ஸ்கோர், வீசப்பட்ட ஓவர்கள், களத்தில் நிற்கும் பேட்டர்கள் மற்றும் அவர் அடித்துள்ள ரன்கள், பந்துவீசும் பௌலர், ரன்ரேட் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் திரையில் கண்டுகளிக்கலாம். மேலும் ஒவ்வொரு பந்தின் அப்டேட்டும் உடனடியாக திரையில் தெரியும். அதேநேரத்தில், பின்னணியில் கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்களின் வர்ணனையையும் நீங்கள் கேட்கலாம். அதன்மூலம் களத்தில் நடப்பதையெல்லாம் நீங்கள் தெரிந்துகொள்ள முடியும்.
IND vs SL Free Live: நேரலை லிங்க்
போட்டியை பார்க்க முடியவில்லையே, நேரலை பார்க்க சந்தா செலுத்த முடியவில்லையே என்ற கவலையை இனி விட்டுவிடுங்கள். ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்தின் தமிழ் வர்ணனையுடனான லைவ் ஸ்கோர் கார்டை பார்த்தால் போட்டியின் அத்தனை விவரங்களை நுணுக்கமாக தெரிந்துகொள்ளலாம். ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்தின் இந்த நேரலை போட்டி தொடங்கும் 8 மணிக்கு சில நிமிடங்களுக்கு முன் தொடங்கும். போட்டி முடியும் வரை நேரலை தொடரும். ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்தின் லைவ் ஸ்கோர் கார்டு யூ-ட்யூப் மற்றும் பேஸ்புக் லிங்க் இங்கு நேரலை தொடங்கியதும் கொடுக்கப்படும்.