IND vs WI: டெஸ்டில் பெரிய மாற்றம்… இந்திய அணியின் பிளேயிங் XI இதுதான்

West Indies Tour Of  India: மேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவுக்கு வரும் அக்டோபர் மாதம் சுற்றுப்பயணம் (IND vs WI Test Series) மேற்கொள்ள இருக்கின்றனர். இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மட்டும் அவர்கள் விளையாட இருக்கிறார்கள்.

Add Zee News as a Preferred Source

IND v WI: 3வது இடத்தில் இந்திய அணி

முதல் டெஸ்ட் போட்டி வரும் அக்டோபர் 2ஆம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்குகிறது. 2வது டெஸ்ட் போட்டி அக்டோபர் 10ஆம் தேதி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்குகிறது. 2025-27 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் 2இல் வென்று, 2இல் தோற்று, 1இல் டிரா செய்து 28 புள்ளிகளுடன் (46.67 புள்ளி விகிதம்) மூன்றாவது இடத்தில் உள்ளது.

IND v WI: அடுத்த வாரம் தொடங்கும் போட்டி

மேற்கு இந்திய தீவுகள் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து 6வது இடத்தில் உள்ளன. 7வது, 8வது, 9வது இடத்தில் முறையே நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்க அணிகள் உள்ளன, அவை இன்னும் இந்த சுழற்சியில் ஒரு டெஸ்டில் கூட விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த வியாழக்கிழமை டெஸ்ட் தொடர் தொடங்க இருக்கும் நிலையில், மேற்கு இந்திய தீவுகள் அணி விரைவில் இந்தியாவுக்கு வருகை தர உள்ளது. இரு அணிகளின் ஸ்குவாடும் அறிவிக்கப்பட்டுள்ளது.

IND v WI: இரு அணிகளின் ஸ்குவாட்

மேற்கு இந்திய தீவுகள்: ரோஸ்டன் சேஸ் (கேப்டன்), ஜோமல் வாரிக்கன், கெவ்லான் ஆண்டர்சன், அலிக் அதனேஸ், ஜான் கேம்பல், டேகனரைன் சந்தர்பால், ஜஸ்டின் கிரீவ்ஸ், ஷாய் ஹோப் (விக்கெட் கீப்பர், டெவின் இம்லாக் (விக்கெட் கீப்பர்), அல்சாரி ஜோசப், பிராண்டன் கிங், ஆண்டர்சன் பிலிப், காரி பியர், ஜெய்டன் சீல்ஸ், ஜோஹன் லேன்

இந்திய அணி: சுப்மான் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி, பிரசித் கிருஷ்ணா, அக்சர் பட்டேல், நாராயண் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்)

IND v WI: இந்திய அணியின் பிளேயிங் லென் எப்படி இருக்கும்?

இந்திய அணியை பொருத்தவரை முதன்மையான பிளேயிங் லெவனில் எவ்வித சிக்கலும் இருக்க வாய்ப்பில்லை. யஷஸ்வி ஜெய்ஸ்வால் – கேஎல் ராகுல் ஓபனிங்கில் இறங்குவார்கள். சாய் சுதர்சன், சுப்மான் கில், துருவ் ஜூரேல், ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் மிடில் ஆர்டரில் களமிறங்குவார்கள்.

அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் ஆகியோரில் இருவர் மட்டுமே விளையாடுவார்கள். அதாவது, அக்சர் பட்டேல் – வாஷிங்டன் விளையாடும்பட்சத்தில் குல்தீப் யாதவ் வெளியே அமரவைக்கப்படுவார். குல்தீப் விளையாடினால் மற்ற இருவரில் ஒருவர் அமரவைக்கப்படுவார். வேகப்பந்துவீச்சை பொருத்தவரை சிராஜ் மற்றும் பும்ரா இரண்டு போட்டிகளில் விளையாடுவார்கள்.

IND v WI: நம்பர் 8 வரை பேட்டிங்

இதுதான் இந்திய அணியின் பிளேயிங் லெவனாக இருக்கும். சாய் சுதர்சனுக்கு தேவ்தத் படிக்கல் பேக்அப் பேட்டராக இருப்பார். விக்கெட் கீப்பர் பேக்அப்பாக நாராயண் ஜெகதீசன் இருப்பார். பிரசித் கிருஷ்ணா வேகப்பந்துவீச்சுக்கு பேக்அப்பாக இருப்பார். ஒருவேளை பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவ் விளையாடாவிட்டாலும் இந்திய அணிக்கு 6 பந்துவீச்சு ஆப்ஷன் மற்றும் 9 பேட்டிங் ஆப்ஷன் கிடைக்கும். ஆனால், குல்தீப் இந்திய அணியில் விளையாடியே ஆக வேண்டும். இதன்மூலம், இந்தியாவின் நம்பர் 8 ஸ்பாட்டை வாஷிங்டன் சுந்தர் பார்த்துக்கொள்வார் எனலாம். 

IND v WI: இந்திய அணி பிளேயிங் லெவன் கணிப்பு

சுப்மான் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் பட்டேல்/வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.