பீஜிங்,
சீனா ஓபன் டென்னிஸ் போட்டி பீஜிங் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஜானிக் சின்னெர் (இத்தாலி) – பிரான்சின் டெரன்ஸ் அட்மேன் உடன் மோதினார்.
இந்த மோதலில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜானிக் சின்னெர் 6-4,5-7, 6-0 என்ற செட் கணக்கில் டெரன்ஸ் அட்மேனை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். நாளை மறுநாள் நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் ஜானிக் சின்னெர், ஹங்கேரியாவின் பேபியன் மரோஸ்ஸான் உடன் மோத உள்ளார்.
Related Tags :