ஐசிசி நடத்தும் மகளிர் உலகக் கோப்பை 2025 தொடர் வரும் செப்டம்பர் 30அம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. டாப் அணிகளான இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா என மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடரில் பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் இலங்கையில் நடைபெற உள்ளன.
Add Zee News as a Preferred Source
வரலாற்றில் இந்திய மகளிர் அணி இதுவரை ஒருமுறை கூட ஐசிசி கோப்பையை வென்றது இல்லை. ஹர்மன்ப்ரீத் கெளர் தலைமையில் களமிறங்கும் இந்திய அணி இம்முறையாவது சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே அதிகமாக உள்ளது. முன்னதாக ஆடவர் இந்திய அணி நீண்ட இடைவெளிக்கு பிறகு அதாவது 28ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் 2011ஆம் ஆண்டு எம். எஸ். தோனி தலைமையில் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது. அதேபோல் இம்முறை நடக்குமா? என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த நிலையில், நேற்று (செப்டம்பர் 26) ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கேப்டன்கள் புகைபபடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 8 அணிகளின் கேப்டன்கள் கலந்து கொண்டு புகைப்படங்கள் எடுத்து கொண்டனர். பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆலியா ஹீலி, இந்தியாவில் தங்களுக்கு ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் என நம்பிகிறேன் என கூறினார்.
இது தொடர்பாக பேசிய அவர், எங்களுக்கு இந்தியாவில் போதுமான ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன். இந்திய ரசிகர்கள் தங்களுடைய சென்னை எம்.எஸ். தோனி சட்டைகளை அணிந்து வர நான் ஊக்கமளிக்கிறேன். ஏனெனில் அது மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதை அணிந்து வந்தாலே சிறப்பாக இருக்கும். எனவே ஆம் ரசிகர்கள் கூட்டங்களில் சில மஞ்சள் நிறத்தைப் பார்ப்பது எங்களுக்கு நன்றாக இருக்கும் என்று கூறினார்.
ஐசிசி மகளிர் உலகக் கோப்பைக்கான இந்திய அணி: ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், யாஸ்திகா பாட்டியா, ரேணுகா சிங் தாக்கூர், தீப்தி சர்மா, சினே ராணா, ஸ்ரீ சரணி, ராதா யாதவ், அமஞ்சோத் கவுர், அருந்ததி ரெட்டி, அருந்ததி ரெட்டி.
ஆஸ்திரேலியா அணி: அலிசா ஹீலி (கேப்டன்), டார்சி பிரவுன், ஆஷ் கார்ட்னர், கிம் கார்த், ஹீதர் கிரஹாம், அலனா கிங், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், தஹ்லியா மெக்ராத், சோஃபி மோலினக்ஸ், பெத் மூனி, எலிஸ் பெர்ரி, மேகன் ஷட், அன்னாபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வோல், ஜார்ஜியா வேர்ஹாம்.
About the Author
R Balaji