Asia Cup 2025, India vs Pakistan Live Score Card: ஆசிய கோப்பை 2025 தொடரின் (டி20ஐ) இறுதிப்போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா – பாகிஸ்தான் அணிகள் 41 ஆண்டுகால ஆசிய கோப்பை வரலாற்றில் இறுதிப்போட்டியில் முதல்முறையாக மோத இருக்கிறது.
Add Zee News as a Preferred Source
India vs Pakistan Final Live: அதிக முறை கோப்பை வென்ற இந்தியா
ஆசிய கோப்பை வரலாற்றில் இதுவரை மொத்தம் 16 தொடர்கள் நடைபெற்றுள்ளன. அதில் 2016 மற்றும் 2022 தொடர்கள் மட்டும் டி20ஐ வடிவில் நடைபெற்றன. மற்ற 14 தொடர்களும் ஓடிஐ வடிவில் நடைபெற்றன. அந்த வகையில், மொத்தம் 8 முறை இந்திய அணி ஆசிய கோப்பையை வென்றுள்ளது. 2016 டி20ஐ ஆசிய கோப்பையை இந்தியா வென்றிருக்கிறது.
மறுமுனையில் பாகிஸ்தான் அணியோ ஆசிய கோப்பையில் அந்தளவிற்கு சிறப்பாக விளையாடியது இல்லை. மொத்தம் 2 முறை மட்டுமே பாகிஸ்தான் கோப்பையை வென்றிருக்கிறது அதுவும் டி20ஐ வடிவில் இதுவரை பாகிஸ்தான் கோப்பையை வென்றதே இல்லை. 2022 டி20ஐ ஆசிய கோப்பையில் இறுதிப்போட்டி வரை வந்தது. எனவே 8வது முறை கோப்பையை வெல்ல இந்திய அணியும், மூன்றாவது முறையாக கோப்பையை வெல்ல பாகிஸ்தானும் முனைப்பு காட்டும்.
India vs Pakistan Final Live: இந்திய அணி என்ன செய்யப்போகிறது?
இந்திய அணி தற்போது ஐசிசி டி20 உலகக் கோப்பை சாம்பியன் என்பதால், ஆசிய கோப்பையையும் வென்றால் சூர்யகுமார் தலைமையிலான இளம் இந்திய வீரர்களுக்கு பெரும் ஊக்கமாக இருக்கும். அதே ஊக்கத்துடன் அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கும் தயாராகலாம். இதனால், இந்திய அணி இன்றும் அதன் வெற்றிகரமான காம்பினேஷனில் களமிறங்கும்.
அதன்படி, சிவம் தூபே மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் மீண்டும் களமிறங்குவார்கள். அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா நீக்கப்படுவார்கள். பேட்டிங் நம்பர் 8 வரை வேண்டும் என இந்திய அணி விரும்புகிறது. அதே நேரத்தில், பும்ரா, ஹர்திக், தூபே, அக்சர், வருண், குல்தீப் என 6 பௌலிங் ஆப்ஷனும் விரும்பும். டாஸ் வென்றால் இரு அணிகளுமே பந்துவீச்சைதான் தேர்வு செய்யும்.
பாகிஸ்தான் நடப்பு ஆசிய கோப்பையில் இரு முறை இந்தியாவிடம் தோல்வியடைந்துள்ளது. இரண்டு போட்டிகளிலும் சேஸிங் செய்த இந்திய அணி வெற்றி பெற்றது. எனவே இம்முறை பாகிஸ்தான் டாஸ் வென்று சேஸிங் செய்து இந்தியாவை வீழ்த்த துடிக்கும். ஒருவேளை இந்தியா முதலில் பேட்டிங் செய்தால் 190க்கு மேல் ரன் அடிக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. அர்ஷ்தீப் இல்லாதபட்சத்தில் இந்திய அணியின் டெத் பௌலிங்கில் பெரிய ஓட்டை ஏற்படும். பும்ரா பவர்பிளேவில் மூன்று ஓவர்களை வீசாமல் இருக்க வேண்டும். அதிகபட்சம் 2 ஓவர்கள் வீசலாம்.
India vs Pakistan Final Live: அபிஷேக் vs அஃப்ரிடி
பாகிஸ்தானும் அதன் பிளேயிங் லெவனை மாற்ற வாய்ப்பில்லை. அபிஷேக் சர்மா பேட்டிங் செய்யும் போது, முதல் ஓவரின் முதல் பந்தை ஷாகின் அப்ரிடி இன்று எப்படி வீசப்போகிறார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. முதல் போட்டியில் பவுண்டரியும், 2வது போட்டியில் சிக்ஸரும் அடித்திருந்தார் அபிஷேக் சர்மா. இன்று இந்த இறுதி யுத்தத்தில் யார் வெற்றிப் பெறுவார்கள் என பார்க்கலாம்.
India vs Pakistan Final Live: நேரலை பார்க்க…!
இந்தியா – பாகிஸ்தான் இறுதிப்போட்டியை இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும். தொலைக்காட்சியில் Sony Sports நெட்வோர்க் சேனலில் நேரலையில் பார்க்கலாம். SonyLiv ஓடிடியில் நீங்கள் மொபைலில் நேரலையாக பார்க்கலாம். ஆனால், இதற்கு நீங்கள் சந்தா செலுத்த வேண்டும். இலவசமாக பார்க்க வேண்டும்.
India vs Pakistan Final Live: தமிழ் வர்ணனையுடன் லைவ் ஸ்கோர்கார்டு
இந்தியா – பாகிஸ்தான் இறுதிப்போட்டியை நேரலையில் காண இயலாதவர்களுக்கு நமது ஜீ தமிழ் நியூஸ் சிறப்பான ஏற்பாட்டை செய்திருக்கிறது. இந்தியா – பாகிஸ்தான் இறுதிப்போட்டியை தமிழ் வர்ணனையுடன் நீங்கள் லைவ் ஸ்கோர் கார்டை யூ-ட்யூப் மற்றும் பேஸ்புக் வழியாக கண்டு ரசிக்கலாம். ஆம், போட்டியின் ஸ்கோர், வீசப்பட்ட ஓவர்கள், களத்தில் பேட்டிங் செய்யும் பேட்டர்கள், அவர்கள் அடித்துள்ள ரன், பந்துவீசும் பௌலர் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் லைவ் ஸ்கோர் கார்டில் பார்க்கலாம். போட்டி 8 மணிக்கு தொடங்கும் என்றாலும் நாங்கள் இரவு 7 மணி முதலே உங்களுடன் இணைந்துவிடுவோம்.
மேலும், கிரிக்கெட் நிபுணர் பவித்ரன் உள்ளிட்ட பல வர்ணனையாளர்கள் இணைந்து தரமான கிரிக்கெட் கமெண்டரியை வழங்க இருக்கிறார்கள். இதன்மூலம் நீங்கள் போட்டியின் ஒவ்வொரு பந்தின் அப்டேட்டையும் உடனுக்குடன் விரிவாக தெரிந்துகொள்ளலாம். இதனை நீங்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம், ஆனால் போட்டி ஒளிபரப்பாகாது. தமிழ் வர்ணனையுடன், லைவ் ஸ்கோர் கார்டை பார்க்கலாம். அதற்கான யூ-ட்யூப் மற்றும் பேஸ்புக் வீடியோ லிங்கை இங்கே காணலாம்.
லைவ் ஸ்கோர் கார்டு நேரலை – யூ-ட்பூப் லிங்க்:
லைவ் ஸ்கோர் கார்டு நேரலை – பேஸ்புக் லிங்க்: