சேலையூரில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற 15 ஆண்டுகளாக போராடும் கவுன்சிலர்!

​தாம்​பரம் மாநக​ராட்​சி, சேலை​யூர் பகு​தி​யில் உள்ள சாலை ஆக்​கிரமிப்பை அகற்ற கோரி கடந்த, 15 ஆண்​டு​களாக திமுக கவுன்​சிலர் தாமோதரன் கோரிக்கை மனு அளித்து வரு​கிறார். ஆனால், மாநக​ராட்சி நிர்​வாகம் அரசி​யல்​வா​தி​களின் அழுத்​தம் காரணமாக ஆக்​கிரமிப்​பு​களை அகற்​றாமல் மெத்​தன​மாக செயல்​படு​வ​தாக குற்​றச்​சாட்டு எழுந்​துள்​ளது. தாம்​பரம் மாநக​ராட்சி எல்லைக்கு உட்​பட்ட, சேலை​யூர் கிராமம், 45-வது வார்​டில் உள்ள ஏழு​மலை தெரு – பள்​ளிக்​கூட தெரு இணைப்பு சாலை​யை, சிலர் சட்ட​விரோத​மாக ஆக்​கிரமிப்பு செய்து வீடு​கள் கட்​டி​யுள்​ளனர்.

இந்த தெரு​வில் அங்​கன்​வாடி மற்​றும், கால்​நடை மருத்​து​வ​மனை செயல்​பட்டு வரு​கிறது. மொத்​தம் 22 அடி அகல​முள்ள சாலை​, ஆக்​கிரமிப்​பின் காரண​மாக, 3 அடி​யாக குறுகி​விட்​டது. குழந்​தைகளை அங்​கன்​வாடிக்கு அழைத்​துச் செல்​லும் பெற்​றோர்​கள், செல்​லப் பிராணி​கள், ஆடு, மாடு​களை மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் செல்​லும் பொது​மக்​களுக்கு ஆக்​கிரமிப்​பு​கள் இடையூறாக உள்​ளது.

இந்த ஆக்​கிரமிப்பு இடத்​தில், தாம்​பரம் மாநக​ராட்சி வரைபடத்​தின்​படி சாலை என்று தான் தகவல் உள்​ளது. இந்த ஆக்​கிரமிப்புகளை அகற்​றக் கோரி​யும், அவ்​விடத்​தில் சாலை அமைத்து தரக்​கோரி​யும், தாம்​பரம் மாநக​ராட்சி அலு​வல​கத்​தில் கடந்த பல ஆண்​டு​களாக முதல்​வர் முதல், எம்​எல்ஏ, எம்​.பி., அமைச்​சர், மாநக​ராட்சி ஆணை​யர், ஆட்​சி​யர் என, அனைத்து தரப்பினரிடமும் அந்த வார்டு கவுன்​சிலர் தாமோதரன் மற்​றும், அப்​பகுதி மக்​கள் சார்​பில் கோரிக்கை மனுக்​கள் அளிக்கப்பட்டன.

ஆனால் இது​நாள்​வரை எந்த ஒருநடவடிக்​கை​யும் எடுக்​கப்​பட​வில்​லை. ஆக்​கிரமிப்பு அகற்​றப்​பட்​டு, அந்த இடத்​தில் சாலை அமைக்​கப்​பட்​டால், அப்​பகுதி மக்​கள் மட்​டுமின்றி சுற்​றி​யுள்ள பகு​தி​வாழ் மக்​களும் பயன்​பெறு​வர். ஆளுங்​கட்சி கவுன்​சிலர் பல ஆண்​டு​களாக முயற்சி செய்​தும் ஆக்​கிரமிப்​பு​களை அகற்ற முடிய​வில்லை என்​றால், ஆக்​கிரமிப்​பாளர்​களின் அரசி​யல் செல்​வாக்கு எவ்​வாறு பயன்​படுத்​தப்​படு​கிறது என்​பதை அனைத்து தரப்​பினரும் புரிந்து கொள்ள வேண்​டும்.

எனவே, ஆக்​கிரமிப்​பு​களை அகற்றி அங்கு குடி​யிருப்​பவர்​களுக்கு நீர்​நிலை ஆக்​கிரமிப்​பு​களில் இருந்து இடமாற்​றம் செய்யப்படும் பயனாளி​களுக்கு வழங்​கு​வது போல மாற்று இடத்​தில் இடம் வழங்​கி, சாலையை அமைத்து மக்​கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்​டும் என, பலதரப்​பினரும் அரசை வலி​யுறுத்தி வரு​கின்​றனர்.

கவுன்சிலர் தாமோதரன்

இதுகுறித்து கவுன்​சிலர் தாமோதரன் கூறியது: மேற்​கண்ட ஆக்​கிரமிப்​பு​களை அகற்றி சாலை அமைக்க வலி​யுறுத்தி கடந்த, 15 ஆண்​டு​களாக பல்​வேறு தரப்​பினருக்​கும் கோரிக்கை மனு அளித்​து ​விட்​டேன். ஆனால் தீர்வுதான் கிடைக்​க​வில்​லை. ஒவ்​வொரு முறை​யும் ஆக்​கிரமிப்​பு​களை அகற்​றும் நேரத்​தில் அரசி​யல் அழுத்​தம் காரண​மாக அகற்​று​வதை அதி​காரி​கள் நிறுத்தி விடுகின்றனர். எனவே, சட்​ட​விரோத​மாக, பொது​மக்​கள் பயன்​பாட்​டுக்​காக உள்ள இணைப்பு சாலையை ஆக்​கிரமிப்பு செய்துள்ளவர்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுத்​து, மீண்​டும் ஆக்​கிரமிப்பு செய்​யாத​வாறு சாலை அமைக்க ஆவண செய்ய வேண்​டும் என்றார்.

ஆக்​கிரமிப்பு அகற்​று​வ​தில் பாரபட்​சம்: தாம்​பரம் மாநக​ராட்சி எல்​லை​யில் சிறிய சாலைகள் முதல், பெரிய சாலைகள் வரை வியா​பாரி​களும், பொது​மக்​களும் தங்​கள் இஷ்டத்​துக்கு சாலைகளை ஆக்​கிரமிப்பு செய்​துள்​ளனர். இதனை வரை​முறைப்​படுத்த வேண்​டிய தாம்​பரம் மாநக​ராட்சி நகரமைப்பு பிரிவு, ஆக்​கிரமிப்பு பிரச்​சினை​களை கண்டு கொள்​வதே இல்​லை. மாறாக அவர்கள் புதிய குடி​யிருப்​பு​களுக்கு அனு​மதி கொடுப்​ப​திலேயே குறி​யாக இருக்​கின்​றனர்​. என சமூக ஆர்​வலர்​கள்​ குற்றம் சாட்டுகின்றனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.