Month: September 2025
நெரிசல் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோருகிறது தவெக: உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று விசாரணை
சென்னை: ‘கரூர் சம்பவம், விபத்துபோல தெரியவில்லை. திட்டமிட்ட சதிபோலவே தெரிகிறது. எனவே, சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழுவைக் கொண்டு உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும்’ என்று உயர் நீதிமன்ற விடுமுறைக் கால நீதிபதியிடம் தவெகவினர் முறையிட்டனர். உயர் நீதிமன்றத்துக்கு தற்போது தசரா விடுமுறை என்பதால், விடுமுறைக்கால நீதிபதியான தண்டபாணியை சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் தவெக வழக்கறிஞர் அணியினர் நேற்று சந்தித்தனர். அப்போது, நீதிபதியிடம் தவெக வழக்கறிஞர் அறிவழகன், … Read more
வரலாறு படைத்த மிக்-21 போர் விமானங்களுக்கு ஓய்வு: பிரியாவிடை நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பெருமிதம்
சண்டிகர்: இந்தியா – ரஷ்யா இடையே நிலவும் நீண்ட கால உறவுக்கு ஓய்வு பெறும் மிக்-21 போர் விமானங்களே சாட்சியாக உள்ளன என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் கூறினார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா விமர்சித்து, இந்தியா மீது 50 சதவீத வரிவிதித்தது. இந்நிலையில் விமானப்படையில் கடந்த 1960-ம் ஆண்டு இணைந்து 60 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய மிக்-21 போர் விமானங்களுக்கு பிரியாவிடை அளிக்கும் நிகழ்ச்சி சண்டிகரில் நேற்று நடைபெற்றது. இதில் … Read more
சத்தீஷ்கார்: 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை; பாதுகாப்புப்படையினர் அதிரடி
ராய்பூர், சத்தீஷ்கார் மாநிலம் கான்கர் மாவட்டத்தில் ஒடிசா மாநில எல்லையில் உள்ள சிந்த்காடக் கிராமத்துக்கு அருகே வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த நக்சலைட்டுகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் … Read more
ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இந்தியாவுக்கு 147 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்
துபாய், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் துபாயில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பகார் ஜமான் மற்றும் பர்கார் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக, சிறப்பாக விளையாடிய பர்கான் … Read more
துருப்பிடித்து வரும் நிலவு; எல்லாவற்றிற்கும் காரணம்… விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்
பீஜிங், சீனாவின் மக்காவ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி ஜிலியாங் ஜின் தலைமையிலான குழுவினர் நிலவின் மேற்பரப்பை பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில் நிலவுக்கும், பூமிக்கும் இடையே உள்ள ஆழ்ந்த தொடர்பை பற்றி அவர்கள் புரிந்து கொள்ள உதவியது. அதுபற்றி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், நிலவுக்கு கெட்ட நிகழ்வு ஒன்று நடந்து வருகிறது. நிலவின் மேற்பரப்பில், அதிலும் துருவ பகுதிகளில் ஹெமடைட் என்ற ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இது ஒரு வகையான இரும்பு ஆக்சைடு ஆகும். நிலவு … Read more
விஜய் பிரச்சாரத்தில் கல்வீச்சு சம்பவம் நடைபெறவில்லை: ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தகவல்
கரூர்: கரூரில் தவெக பிரச்சாரத்தின்போது கல்வீச்சு சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறினார். கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆட்சியர் மீ.தங்கவேல், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், மின்வாரிய தலைமைப் பொறியாளர் ராஜலட்சுமி ஆகியோர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர். அப்போது, ஆட்சியர் மீ.தங்கவேல் கூறும்போது, “கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேரும் சடலமாகத்தான் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். மயங்கி விழுந்தவர்களில் ஒருவர் உயிரிழந்ததால், உயிரிழப்பு எண்ணிக்கை 40-ஆக உயர்ந்துள்ளது. தற்போது 80 … Read more
திருப்பதி | சிறையில் இருந்தபடியே 7 பட்டங்கள் பெற்ற கைதி
திருப்பதி: திருப்பதி மாவட்டம், ஏர்பேடு மண்டலம், செங்காலபல்லி எனும் கிராமத்தை சேர்ந்தவர் ஜி. யுகந்தர் (33). இவர் கடந்த 2010-ம் ஆண்டில் இண்டர்மீடியட் (பிளஸ் 2) படித்துக் கொண்டிருந்தபோது, ஒரு சிறுவனை கடத்தி கொலை செய்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து யுகந்தர், கடப்பா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறை அதிகாரிகளின் உதவியுடன், ஹைதராபாத்தில் உள்ள பி.ஆர். அம்பேத்கர் தொலைதூர கல்வி பல்கலைக்கழகத்தில் படித்து அடுத்தடுத்து 4 பட்டப் படிப்புகளை அவர் நிறைவு … Read more
அசாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு
திஸ்பூர், அசாமின் உடல்குரி பகுதியில் இன்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இரவு 10.37 மணியளவில் ரிக்டர் அளவில் 3.5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 26.73 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 92.29 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. அசாமில் அடிக்கடி … Read more
ஜப்பான் ஓபன் டென்னிஸ்: கேஸ்பர் ரூட் அரையிறுதிக்கு முன்னேற்றம்
டோக்கியோ, பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான கேஸ்பர் ரூட் (நார்வே) – ஆஸ்திரேலியாவின் அலெக்சாண்டர் வுகிக் உடன் மோதினார். இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய கேஸ்பர் ரூட் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் அலெக்சாண்டர் வுகிக்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். 1 … Read more