அயோத்தியில் உள்ள அனுமன்கிரி கோயில் பிரசாதத்தில் கலப்படம்: ஆய்வில் கண்டுபிடிப்பு

அயோத்தி: அயோத்​தி​யின் பிரபல அனு​மன்​கிரி கோயில் பிர​சாதத்​தில் கலப்​படம் கண்​டறியப்​பட்​டுள்​ளது. உ.பி. உணவுப் பாதுகாப்புத் துறை ஆய்​வில் இது தெரிய​வந்​துள்​ளது. அயோத்தி ராமர் கோயிலுக்கு அரு​கில் பழம்​பெரும் அனு​மன்​கிரி கோயில் உள்ளது.

இங்கு அனு​மருக்கு பிர​சாத​மாக நெய்​யில் செய்த கடலை மாவு லட்டு படைக்​கப்​படு​கிறது. இந்த பிர​சாதத்தை உணவுப் பாதுகாப்புத் துறை துணை ஆணை​யர் மாணிக் சந்​திர சிங் ஆய்வு செய்​தார். இதில் பிர​சாதத்​தில் கலக்​கப்​படும் நெய் தூய்மையானதல்ல என்று தெரிய​வந்​துள்​ளது.

இதற்​காக, உணவுப் பாது​காப்​புத் துறை​யால் எடுக்​கப்​பட்ட மூன்று மாதிரி​களில் இரண்டு அதன் தரத்​தில் இல்லை எனத் தெரிய​வந்துள்​ளது. அயோத்​தி​யில் பிர​சாதங்​கள் விற்​கும் கடைகளி​லும் சோதனை நடத்​தப்​பட்​டது. இதில் பல கடைகளில் கலப்​படம் இருப்​பது தெரிய​வந்​துள்​ளது. இக்​கடைகளில் விற்​கப்​படும் ஒரு கிலோ லட்​டு​களின் விலை ரூ.450 முதல் ரூ.500 வரை நிர்ணயிக்கப்பட்​டது.

இது அதிக விலை​யாக இருந்​த​போ​தி​லும் கலப்​படம் கண்​டறியப்​பட்​டுள்​ளது. அயோத்​தி​யின் பிரபல தனி​யார் கடை ஒன்​றில் பன்னீர் மற்​றும் சீஸ் மாதிரி​யும் எடுத்து சோதனை செய்​யப்​பட்​டது. இதி​லும் கலப்​படம் இருப்​பது கண்​டறியப்​பட்​டுள்​ளது. அயோத்திக்கு வருகை தரும் பக்​தர்​களில் சுமார் 99% பேர் ஹனு​மன்​கிரி கோயிலுக்கு செல்​வது வழக்​கம். ராமரை தரிசிப்​ப​தற்கு அனு​மரிடம் அனு​மதி பெற வேண்​டும் என்​பது ஐதீக​மாக உள்​ளது.

முதல்வர் நடவடிக்கை: இச்​சூழலில் அயோத்​தி​யின் பல இடங்​களில் வெளி​யான கலப்​படம் புகார், ஒரு விவாதப் பொருளாகமாறியுள்​ளது. இந்​நிலை​யில் இந்த விவ​காரத்​தில் முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் உரிய நடவடிக்கை எடுப்​பார் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதற்கு முன் கடந்த ஆண்டு திருப்​பதி லட்டு பிர​சாதத்​தில் கலப்​படப் புகார் எழுந்து சர்ச்​சை​யானது குறிப்பிடத்தக்​கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.