India vs West Indies Test Series: இந்தியா – மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை (அக். 2) முதல் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
Add Zee News as a Preferred Source
IND vs WI: வெஸ்ட் இண்டீஸ் நிலை இதுதான்…!
ரோஸ்டன் சேஸ் தலைமையிலான மேற்கு இந்திய தீவுகள் அணி தற்போது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அல்ஸாரி ஜோசப் மற்றும் ஷாமர் ஜோசப் ஆகிய வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாதது மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. ஜெய்டன் சீல்ஸ், ஆண்டர்சன் பிலிப்ஸ் ஆகியோரை வேகப்பந்துவீச்சில் மேற்கு இந்திய தீவுகள் அணி அதிகம் நம்பியிருக்கிறது. ஜேமல் வாரிகன், சேஸ் ஆகியோர் சுழற்பந்துவீச்சில் உதவிகரமாக இருப்பார்கள்.
ஜான் கேம்பெல், பிரண்டன் கிங், கெவ்லான் ஆண்டர்சன், அலிக் அதனேஸ், டேகனரின் சந்தர்பால், ஷாய் ஹோப் உள்ளிட்டோர் பேட்டிங்கில் சோபிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு இந்திய தீவுகள் அணி கடந்த ஜூலை மாதம் தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவிடம் வைட்வாஷ் ஆகி மண்ணைக் கவ்விய நிலையில், பேட்டிங் ஆர்டரில் சில மாற்றங்களுடன் இந்தியாவில் களமிறங்க இருக்கிறது. இந்தியாவுக்கு வெஸ்ட் இண்டீஸ் கடினமாக போட்டியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
IND vs WI: இந்திய அணியில் யார் யாருக்கு வாய்ப்பு?
இந்திய அணியை பொருத்தவரை ஏறத்தாழ பிளேயிங் லெவன் உறுதியாகிவிட்டது. கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் ஓபனிங் இறங்குவார். சாய் சுதர்சன், சுப்மான் கில், தேவ்தத் படிக்கல்/நிதிஷ் குமார் ரெட்டி, துருவ் ஜூரேல், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல் ஆகியோர் நம்பர் 8 வரை பேட்டிங் செய்வார்கள். பும்ரா மற்றும் சிராஜ் வேகப்பந்துவீச்சாளர்களாக விளையாடுவார்கள். குல்தீப் யாதவ் பிரதான சுழற்பந்துவீச்சாளராக இருப்பார். பிரசித், நாராயண் ஜெகதீசன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் பேக் அப் வீரர்களாக இருப்பார்கள். ஆசிய கோப்பை 2025 தொடருக்கு பின் உடனடியாக பும்ரா, அக்சர் பட்டேல் ஆகியோர் பிளேயிங் லெவனில் விளையாடுவார்கள்.
அகமதாபாத் ஆடுகளம் முதலிரண்டு நாள்களுக்கு வேகப்பந்துவீச்சுக்கு உதவிகரமாக இருக்கும். அதேநேரத்தில், அடுத்த மூன்று நாள்களுக்கு சுழற்பந்துவீச்சுக்கே அதிக பலன் இருக்கும். இதனால், இந்திய அணி சுழற்பந்துவீச்சில் அதிக பலத்துடன் களமிறங்கும். வேகப்பந்துவீச்சில் கூடுதல் ஆப்ஷனுக்காக நிதிஷ்குமார் ரெட்டிக்கு வாய்ப்பு கிடைக்கலாம். இதன்படி பிளேயிங் லெவன் அமையும்.
IND vs WI: இந்திய அணி பிளேயிங் லெவன்
இந்தியா: கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், சுப்மான் கில் (கேப்டன்), நிதிஷ்குமார் ரெட்டி, துருவ் ஜூரேல், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ்.
About the Author
Sudharsan G