டெல்லி: மத்தியஅரசு தமிழ்நாட்டுக்கு ரூ.4144 கோடி உள்பட மாநிலங்களுக்கான வரி பகிர்வு நிதியை விடுவித்தது உள்ளது. இதில், அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்திற்கு ரூ.18,227 கோடியும், பீகாருக்கு ரூ.10,219 கோடியும் விடுவிக்கப்பட்டு உள்ளது. வரவிருக்கும் பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு, மாநிலங்கள் மூலதனச் செலவினங்களை விரைவுபடுத்தவும், அவர்களின் வளர்ச்சி/நலன்புரி தொடர்பான செலவினங் களுக்கு நிதியளிக்கவும் உதவும் வகையில், மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு ₹1,01,603 கோடி கூடுதல் வரிப் பங்கை முன்கூட்டியே ஒரே தவணையாக விடுவித்துள்ளது. அதன்படி, அக்டோபர் […]
