வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராக அந்த அணி இரண்டு டெஸ்ட் போட்டி விளையாட இருக்கும் நிலையில், முதல் டெஸ்ட் போட்டி இன்று (அக்டோபர் 02) அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய தேர்வு செய்தது.
Add Zee News as a Preferred Source
அதன்படி முதலில் பேட்டிங் செய்தது. ஆனால் இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட்களை அடுத்ததடுத்து இழந்தாது. தொடக்க வீரர்களான ஜான் கேம்பல் மற்றும் டேகனரின் சந்தர்பால் முறையே 8, 0 என ஆட்டமிழந்தனர். இதையடுத்து வந்த அலிக் அதனேஸ் 12, பிராண்டன் கிங் 13, ரோஸ்டன் சேஸ் 24, சாய் ஹோப் 26 ரன்கள் எடுத்தனர். அதிகபட்சமாக ஜஸ்டின் கிரீவ்ஸ் மட்டுமே 32 ரன்களை எடுத்திருந்தார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 162 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இந்திய அணியின் சார்பில் ஜஸ்பிரித் பும்ரா 3, முகமது சிராஜ் 4, குல்தீப் யாதவ் 2 மற்றும் வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டையும் எடுத்தனர். இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை செய்ய வந்தது. தொடக்க வீரர்களாக கே.எல், ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். பின்னர் ஜெய்ஸ்வால் 36 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த சாய் சுதர்சன் 7 ரன்களிலேயே ஆட்டமிழந்தார்.
கே.எல். ராகுல் அரைசதம் விளாசினார். சாய் சுதர்சன் ஆட்டமிழந்த பின்னர் கேப்டன் சுப்மன் கில் களமிறங்கி களத்தில் 18 ரன்கள் அடித்து நிலைத்திருக்கிறார். முதல் நாள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்கள் இழப்பிற்கு 121 ரன்களை எடுத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ரோஸ்டன் சேஸ் மற்றும் ஜெய்டன் சீல்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். நாளை இரண்டாம் போட்டி தொடங்கும்.
இரு அணிகளின் பிளேயிங் 11
இந்திய அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், ஷுப்மன் கில் (கேப்டன்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
வெஸ்ட் இண்டீஸ் அணி: டேகனரைன் சந்தர்பால், ஜான் காம்ப்பெல், அலிக் அதானாஸ், பிராண்டன் கிங், ஷாய் ஹோப் (வாரம்), ரோஸ்டன் சேஸ் (கேப்டன்), ஜஸ்டின் க்ரீவ்ஸ், ஜோமெல் வாரிக்கன், காரி பியர், ஜோஹன் லெய்ன், ஜேடன் சீல்ஸ்.
About the Author
R Balaji